PSL தொடரில் விளையாட சங்கா, மெத்திவ்ஸ் | தினகரன்

PSL தொடரில் விளையாட சங்கா, மெத்திவ்ஸ்

 

பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடருக்கு இலங்கையில் இருந்து இரண்டு வீரர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

ஓய்வுபெற்ற வீரர் குமார சங்கக்கார, முல்தான் சுல்தான்ஸ் அணியில் விளையாடவுள்ளார்.

அஞ்சலோ மெத்தீவ்ஸ் லாஹுர் கலண்டர்ஸ் அணிக்காக மேலதிக வீரராக இணைக்கப்பட்டுள்ளார்.

இந்த தொடர் எதிர்வரும் 2018ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ளது.

இதேவேளை, இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது, இலங்கை அணியின் அஞ்சலோ மெத்தீவ்ஸ் பந்துவீச மாட்டார் என்று தீர்மானிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

காயத்தில் இருந்து மீண்டுள்ள அஞ்சலோ மெத்தீவ்ஸ் இந்த தொடரில் இணைக்கப்பட்டுள்ளார்.

எனினும் அவர் பந்துவீசமாட்டார் என்று, அணியில் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர் ருமேஷ் ரத்நாயக்க தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும் அவர் பந்துவீச மாட்டார் என்ற தீர்மானித்துக்கு வரவில்லை என்று அணித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேவை ஏற்படும் போது அவரது பந்துவீச்சை பயன்படுத்தவும் அணித் தலைவர் எதிர்பார்த்துள்ளதாக கூறப்படுகிறது.

இலங்கை அணிக்கும், இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டுசபைத் தலைவரின் பதினொருவர் அணிக்கும் இடையிலான போட்டியில் அவர் பந்துவீசி இருந்தார்.

 


Add new comment

Or log in with...