Friday, March 29, 2024
Home » Fashion Bug ‘ரூ சித்தம் 2023’ சிறப்பான முறையில் வெற்றிகரமாக நிறைவு

Fashion Bug ‘ரூ சித்தம் 2023’ சிறப்பான முறையில் வெற்றிகரமாக நிறைவு

by Rizwan Segu Mohideen
October 23, 2023 3:42 pm 0 comment

இலங்கையில் முன்னணி பேஷன் விற்பனையகமான Fashion Bug, தொடர்ச்சியாக 13வது வருடமாக ரூ சித்தம் (Roo Siththam) 2023 என்ற தனது அகில இலங்கை சிறுவர் சித்திரப் போட்டியை அண்மையில் நிறைவு செய்தது.

பிஷப்ஸ் கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்த கண்கவர் பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதி சந்தன சூரியபண்டார மற்றும் கௌரவ அதிதிகளான பர்வீஸ் மஹரூப் மற்றும் கலாநிதி ஹயேஷிகா பெனாண்டோ உட்பட பல சிறப்பு விருந்தினர்கள் கலந்து சிறப்பித்தனர். விழாவில் 700க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர், அவர்களில் 250க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

ரூ சித்தம் 2023 இன் எண்ணக்கருவாக “என் உலகம், என் கண்கள் மூலம்”, இது நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களை தங்கள் படைப்பு திறன்களைச் சமர்ப்பிக்க உந்துசக்தியாக இருந்தது. 7 முதல் 9 வயது வரை, 10 முதல் 12 வயது வரை மற்றும் 13 முதல் 16 வயது வரையிலான மூன்று வயதுப் பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றதுடன் , 81,246 இளம் கலைஞர்கள் தங்கள் இதயங்களையும் ஆன்மாவையும் தங்கள் படைப்புகளில் இலயிக்கச் செய்து, உலகம் பற்றிய தங்கள் தனித்துவமான கண்ணோட்டங்களை வெளிப்படுத்தினர்.

ரூ சித்தம் 2023 போட்டியானது கல்வி அமைச்சின் அனுமதி மற்றும் மேற்பார்வையுடன் நடாத்தப்பட்டது, இது நிகழ்வின் மிகுந்த நம்பகத்தன்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு உத்தரவாதம் அளிக்கிறது. Visual and Performing Arts பல்கலைக்கழகத்தின் முக்கிய விரிவுரையாளர்கள் நடுவர்களாக திகழ்ந்தமை, மதிப்பீடு செயல்முறை நியாயமானதாகவும் திறமையாகவும் நடாத்தப்படுவதை உறுதிசெய்தது. பரந்த அளவிலான திறமையாளர்களில், மொத்தம் 272 வெற்றியாளர்களின் படைப்புக்கள் வெளிக்கொண்டு வரப்பட்டு, அவர்களின் விதிவிலக்கான கலைப்படைப்புக்காக பாராட்டுகளையும் அங்கீகாரத்தையும் பெற்றனர்.

07-09 வயதுப் பிரிவில் மாவனெல்லை மயூரபாத கல்லூரியைச் சேர்ந்த இ.லகிரா சவென் எதிரிசிங்க வெற்றியீட்டினார். அதேவேளை 10-12 வயதுக்குட்பட்ட பிரிவில் கந்தானை டி மஸெனோட் கல்லூரியைச் சேர்ந்த டபிள்யூ.ஏ.என். ஹசரேல் பெரேரா வெற்றிபெற்றார். வெற்றிக்காக கடும் போட்டி நிலவிய 13-16 வயதுப் பிரிவில் கண்டி மகாமாயா பெண்கள் கல்லூரி மாணவி அஞ்சலி நிமாஷா கருணாவர்தன வெற்றியீட்டினார். இந்த இளம் தலைமுறையினர் தங்கள் திறமையை வெளிப்படுத்தி தங்கள் வயதுப் பிரிவுகளில் சிறந்தவர்களாக தங்களை வெளிப்பத்திக் கொண்டனர்.

இந்த திறமையான இளம் கலைஞர்களுக்கு டேப்லெட்டுகள்(வயடிடநவள), சைக்கிள்கள் மற்றும் பரிசு வவுச்சர்கள் பாராட்டுச் சின்னங்களாக வழங்கப்பட்டது மட்டுமல்லாமல், அவர்களின் சொந்த கலைப்படைப்புகளைக் கொண்ட தனிப்பயனாக்கப்பட்ட குடையும் வழங்கப்பட்டது. மேலும், பட்டியலிடப்பட்ட அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் பதக்கங்கள், சான்றிதழ்கள் மற்றும் அவர்களின் படைப்பு முயற்சிகளை அங்கீகரிக்கும் வகையில் பரிசுகள் வழங்கப்பட்டன.

2011 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட, பாடசாலை மாணவர்களின் ஆக்கத்திறன்களை அடையாளம் காணும் நோக்குடன், இலங்கையில் மாணவர்களின் கல்வியை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட Fashion Bug இன் சமூக நிலைத்தன்மை தளமான சிசு திரிகம தொடர்பான கையொப்ப வருடாந்த நிகழ்வே ரூ சித்தம் ஆகும். Fashion Bug இன் தலைமைச் செயற்பாட்டு அதிகாரி ஷபியர் சுபியான் கூறுகையில், “Fashion Bug ஆனது அடுத்த தலைமுறையின் ஆக்கப்பூர்வமான திறமைகளை ஆதரிப்பதற்கும் வளர்ப்பதற்கும் உறுதிபூண்டுள்ளது. ரூ சித்தம் என்பது இளம் கலைஞர்களுக்கு அவர்களின் தனித்துவமான கண்ணோட்டங்களை வெளிப்படுத்த அதிகாரம் அளிக்கும் ஒரு தளமாகும், மேலும் நாங்கள்;. அவர்களின் கலைப் பயணத்தில் ஒரு பகுதியாக இருப்பதை எண்ணி மகிழ்ச்சியடைகிறோம்.”எனக் கூறினார்.

மேலதிக தகவல்களுக்கு, www.fashionbug.lk ஐ பார்வையிடவும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT