கீதாவின் இடத்திற்கு பியசேன கமகே | தினகரன்

கீதாவின் இடத்திற்கு பியசேன கமகே

 

பியசேன கமகே பாராளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்தார்.

இன்று (10) பாராளுமன்றத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இரட்டை பிரஜாவுரிமை கொண்டிருந்ததன் காரணமாக கீதா குமாரசிங்க, பாராளுமன்ற பதவிக்கு தகுதி அற்றவர் என உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் (02) தீர்ப்பு வழங்கியிருந்தது.

அதன் அடிப்படையில் கீதா குமாரசிங்கவின் வெற்றிடத்திற்கு, காலி மாவட்டத்தின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியலில், அடுத்து அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்ற பியசேன கமகே, நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...