இலங்கை அணியுடனான 2 நாள் பயிற்சி ஆட்டம் | தினகரன்

இலங்கை அணியுடனான 2 நாள் பயிற்சி ஆட்டம்

கொல்கத்தாவில் இன்று

இலங்கை அணி, இந்திய கிரிக்கெட் சபை தலைவர் லெவலுடன் 2 நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. இந்த ஆட்டம் கொல்கத்தாவில் இன்று தொடங்குகிறது.

இலங்கை கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 2 ஒரு நாள் ஆட்டம் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது.

இந்தியா- இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் வருகிற 16-ம் திகதி தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடருக்கு முன்பு இலங்கை அணி பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது.

சண்டிமால் தலைமையிலான இலங்கை அணி இந்திய கிரிக்கெட் சபை தலைவர் லெவலுடன் 2 நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது.

இந்த ஆட்டம் கொல்கத்தாவில் இன்று (11-ம் திகதி) தொடங்குகிறது.

இலங்கைக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விளையாடும் கிரிக்கெட் வாரிய தலைவர் லெவனுக்கு சஞ்சு சாம்சன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பயிற்சி ஆட்டத்தில் விளையாடும் கிரிக்கெட் சபை தலைவர் அணி வருமாறு:-

சஞ்சு சாம்சன் (தலைவர்), அபிஷேக்குப்தா, ஆகாஷ் பண்டாரி, அவேஷ்கான், சக்சேனா, ஜிவான்ஜித்சிங், ரவிகிரண், ரோகன் பிரேம், சந்தீப், தமய் அகர்வால், சந்தீப் வாரியா, அமோல் பிரீத்சிங்.

இலங்கை அணி வீரர்கள் பயிற்சி ஆட்டத்தில் திறமையை வெளிப்படுத்தி டெஸ்ட் தொடரில் சிறப்பாக ஆட முயற்சிப்பார்கள். 


Add new comment

Or log in with...