Home » ‘BreastOber’: மார்பக புற்றுநோய் பரிசோதனைகளுக்கு 30% சேமிப்பை வழங்கும் Hemas Hospitals

‘BreastOber’: மார்பக புற்றுநோய் பரிசோதனைகளுக்கு 30% சேமிப்பை வழங்கும் Hemas Hospitals

- விழிப்புணர்வைப் பரப்பி, உயிர் காக்கும் முயற்சி

by Rizwan Segu Mohideen
October 23, 2023 11:19 am 0 comment

மார்பக புற்றுநோய் என்பது உலகளவில் காணப்படுகின்ற ஒரு பிரச்சினை ஆகும்.

அதிர்ச்சியூட்டும் வகையில் அதிகரித்து வருகின்ற இந்த நிலைமைக்கு இலங்கை விதிவிலக்கு கிடையாது. உலகளவில் 14 செக்கன்களுக்கு ஒருவர் என்ற அடிப்படையில் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டு வருவதுடன், 100% குணமடைவதற்கு ஆரம்பகட்டத்திலேயே இதனைக் கண்டறிதல் மிகவும் முக்கியமானது.

2020 ஆம் ஆண்டில் உலகளவில் 2.3 மில்லியன் பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 685,000 பேர் தமது உயிர்களை இழந்துள்ளமையாலும், இதற்கு தேவையான நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படல் வேண்டும்.

இலங்கையில் 2019 ஆம் ஆண்டில் மாத்திரம் 4,500 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளமை புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இப்பிரச்சினையின் பாரதூரத்தைப் புரிந்துகொண்டு ஆண்டுதோறும் ஒக்டோபர் மாதத்தில் அனுட்டிக்கப்பட்டு வருகின்ற மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தில் “BreastOber” என்று அழைக்கப்படுகின்ற விசேட விழிப்புணர்வு முயற்சியின் மூலமாக மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு ஹேமாஸ் ஹொஸ்பிட்டல்ஸ் முன்வந்துள்ளது.

ஹேமாஸ் ஹொஸ்பிட்டல்ஸிலுள்ள உடலுக்கு வேதனையை ஏற்படுத்தாத மமோகிராம் தொழில்நுட்பத்தின் துணையுடன், ஆரம்ப கட்டத்திலேயே இதனைக் கண்டறிய வேண்டியதன் முக்கியத்துவம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும். இந்த பரிசோதனையை மேற்கொள்ளும் சந்தர்ப்பத்தில் எவ்விதமான அசௌகரியங்கள் தொடர்பாகவும் பெண்கள் அச்சம் கொள்ளத் தேவையற்ற ஒரு அதிநவீன தொழில்நுட்பமாக இந்த முறை காணப்படுகின்றது.   

இலங்கையில் மிகவும் நேசிக்கப்படுகின்ற ஒரு சுகாதாரப் பராமரிப்பு வர்த்தகநாமமாகவும், சமூகரீதியாக பொறுப்புணர்வுள்ள ஒரு நிறுவனமாகவும் திகழ்ந்து வருகின்ற ஹேமாஸ் ஹொஸ்பிட்டல்ஸ், மார்பக புற்றுநோய் தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, அறிவூட்டும் முயற்சியில் தன்னை ஈடுபடுத்தியுள்ளது. விழிப்புணர்வைத் தோற்றுவிப்பதற்கு அப்பால், முற்கூட்டியே கண்டறிந்து, தடுப்பதற்கான நடவடிக்கைகளை பெண்கள் முற்கூட்டியே எடுப்பதையும் “BreastOber” ஊக்குவிக்கின்றது. ஹேமாஸ் ஹொஸ்பிட்டல்ஸ் BreastOber சேவை மையத்தை 0777-001216 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக அழைப்பினை ஏற்படுத்தி பொதுமக்கள் இலவச மருத்துவ சோதனைக்கான முற்பதிவை மேற்கொள்ளலாம். BreastOber சிகிச்சை மையமானது தினசரி மு.ப 7.30 முதல் பி.ப 3.30 மணி வரை திறந்திருக்கும். #BreastOber ஊக்குவிப்பு காலப்பகுதியில் அதிநவீன மமோகிராம் சோதனைகளை மேற்கொள்வதற்கு 30% விசேட தள்ளுபடியை ஹேமாஸ் ஹொஸ்பிட்டல்ஸ் வழங்குகின்றது.         

மார்பக புற்றுநோயை குணப்படுத்தக்கூடிய கட்டத்திலேயே முற்கூட்டியே கண்டறிவதற்கான மிகவும் திறன்மிக்க கருவியான மமோகிராம் எந்திரத்தின் முக்கியத்துவம் தொடர்பான விழிப்புணர்வைத் தோற்றுவிக்க “BreastOber” உதவுகின்றது. தொழில்நுட்பரீதியாக மேம்பட்ட அதிநவீன மமோகிராம் கட்டமைப்பினை இலங்கையில் அனைத்து மக்களும் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பினை வழங்குவதையிட்டு ஹேமாஸ் ஹொஸ்பிட்டல்ஸ் பெருமை கொள்வதுடன், மார்பக புற்றுநோயை நேரடியாக உடல்ரீதியான சோதனை மூலம் கண்டறிவதற்கு முன்பதாகவே இதன் மூலமாக இலகுவாகக் கண்டறிந்து கொள்ள முடியும்.   

மமோகிராம் எந்திரத்தின் நன்மைகளுக்கு மத்தியிலும், இது அசௌகரியத்தை ஏற்படுத்தலாம் என்ற தவறான கருத்து பெரும்பாலான பெண்கள் மத்தியில் காணப்படுகின்றது. எனினும் ஹேமாஸ் ஹொஸ்பிட்டல்ஸிலுள்ள அதிநவீன மமோகிராம் கட்டமைப்பானது அசௌகரியத்தையும், உடல் வேதனையையும் முடிந்தளவுக்கு குறைப்பதை உறுதி செய்து, பரிசோதனை நடைமுறையை பெண்களுக்கு இலகுவானதொன்றாக மாற்றுவது பெண்களின் அக்கறையைப் போக்கும் முக்கியமான அனுகூலங்களில் ஒன்றாகும். ஆகவே முற்கூட்டியே கண்டறிவது அசௌகரியமான ஒரு அனுபவம் அல்ல என்ற மீள்உத்தரவாதத்தை இது இலங்கையிலுள்ள பெண்களுக்கு வழங்குகின்றது.

ஏனையோருடன் ஒப்பிடுகையில், குறிப்பிட்ட நபர்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படும் அபாயத்தைக் கொண்டுள்ளதை ஹேமாஸ் ஹொஸ்பிட்டல்ஸ் இனங்கண்டுள்ளது. பரம்பரையில் மார்பக புற்றுநோயை கொண்டுள்ளவர்கள், அதிக மன அழுத்தம் கொண்ட பதவிகளில் உள்ள பெண்கள், நடுத்தர வயது மற்றும் வயதான பெண்கள் கூடுதலான அளவில் ஆபத்தைக் கொண்டுள்ளனர். ஆகவே இத்தகைய பெண்களை எட்டி, தடுப்பு நடவடிக்கையாக கிரமமான அடிப்படையில் மமோகிராம் சோதனையை மேற்கொள்வதை அவர்கள் கருத்திலெடுப்பதை ஊக்குவிப்பதே “BreastOber” இன் நோக்கமாகும். மார்பக புற்றுநோய் உள்ளதா என கண்டறிவது முதல், சத்திர சிகிச்சை ஏற்பாடு, சத்திர சிகிச்சைக்கு முன்பும், பின்பும் நோயாளர்களுக்கான மருத்துவ ஆலோசனை என ஹேமாஸ் ஹொஸ்பிட்டல்ஸின் ஒட்டுமொத்த கட்டமைப்பும், மார்பக புற்றுநோய் எவ்வாறு இலங்கையில் கண்டறியப்படுகின்றது மற்றும் சிகிச்சையளிக்கப்படுகின்றது என்பதில் புரட்சியைத் தோற்றுவித்துள்ளது.     

மார்பக புற்றுநோயை கண்டறிவதை தாமதப்படுத்துவது, பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளதுடன், துரதிர்ஸ்டவசமான முடிவாக அன்பிற்குரியவர்களை அகால வேளையில் இழக்க நேரிடலாம். புற்றுநோய் நிலைமை அதிகரிக்கின்ற போது, அது ஏனைய அவயவங்களுக்கும் பரவி, நோயாளிக்கு தாங்க முடியாத வேதனையை ஏற்படுத்துகின்றது. இதனாலேயே திறம்பட சிகிச்சையை முன்னெடுப்பதற்கும், உயிர்பிழைக்கும் வாய்ப்பினை அதிகரிப்பதற்கும் மமோகிராம் சோதனை மூலமாக ஆரம்பத்திலேயே கண்டறிந்து கொள்வது மிகவும் முக்கியம்.

ஹேமாஸ் ஹொஸ்பிட்டல்ஸின் முகாமைத்துவப் பணிப்பாளரான கலாநிதி லகித் பீரிஸ் அவர்கள் “BreastOber” இன் முக்கியத்துவம் தொடர்பில் கருத்து வெளியிடுகையில், “ஆரோக்கியமான வாழ்வை முன்னெடுப்பதற்கு இடமளிப்பதே எமது நோக்கம். எமது நோயாளர்களுக்கும் அப்பால், நாம் சேவையாற்றும் சமூகத்திற்கும் இது நீட்டிக்கப்பட்டுள்ளது. மார்பக புற்றுநோயை தடுப்பதற்கு வெற்றிகரமான அத்திவாரம் ஆரம்பத்திலேயே அதனைக் கண்டறிவதே என்பதை ‘BreastOber’ மூலமாக நாம் வலியுறுத்த விரும்புகின்றோம். ஆரம்பத்திலேயே கண்டறிவதன் மூலமாக முற்றிலும் குணப்படுத்தக்கூடிய இந்த நோய் தொடர்பான விழிப்புணர்வைத் தோற்றுவித்து, எதிர்மறையான விளைவுகளைக் குறைக்கின்ற எமது முயற்சியில் இணைந்துகொள்ளுமாறு அனைத்து இலங்கை மக்களுக்கும் நாம் அழைப்பு விடுக்கின்றோம்,” என்று குறிப்பிட்டார்.       

ஹேமாஸ் ஹொஸ்பிட்டல்ஸ் தொடர்பான விபரங்கள்
2008 ஆம் ஆண்டில் ஹேமாஸ் ஹொஸ்பிட்டல்ஸ் செயல்பட ஆரம்பித்த முதற்கொண்டே, இலங்கையின் முன்னணி சுகாதாரப் பராமரிப்பு ஸ்தாபனமாக எழுச்சி கண்டுள்ளது. ஹேமாஸ் ஹொஸ்பிட்டல்ஸ் வத்தளை மற்றும் தலவத்துகொடை ஆகிய இடங்களில் வைத்தியசாலைகளைக் கொண்டுள்ளதுடன், தரம், பாதுகாப்பு மற்றும் நோயாளர் கவனிப்பு ஆகியவற்றில் முன்மாதிரியான செயல்பாடுகளுடன், மேன்மையின் சின்னமாக மாறியுள்ளது. பல்வேறு துறைகளில் செயல்பாடுகளைக் கொண்டுள்ள கூட்டு நிறுவனங்கள் குழுமமான ஹேமாஸ் ஹோல்டிங்ஸின் துணை நிறுவனமான ஹேமாஸ் ஹொஸ்பிட்டல்ஸ், Australian Council on Healthcare Standards International (ACHSI) அடங்கலாக சர்வதேச அங்கீகாரங்களை சம்பாதித்துள்ளது மட்டுமன்றி, ஐக்கிய இராச்சியத்தைத் தளமாகக் கொண்ட LMS Certification Limited இடமிருந்து Integrated Management System சான்று அங்கீகாரத்தைப் பெற்ற இலங்கையின் ஒரே ஸ்தாபனம் என்ற தனித்துவமான அந்தஸ்தையும் சுமக்கின்றது.  மருத்துவ ஆய்வுகூடங்களின் விரிவான வலையமைப்பும், அர்ப்பணிப்புடன் வழங்கும் முழுமையான விசேட மருத்துவ சிகிச்சைகளையும், இலங்கை மக்கள் அனைவருக்கும் பெற்றுக்கொள்ள முடிகின்ற, உலகத் தரம் வாய்ந்த சுகாதாரப் பராமரிப்பை வழங்கும் தனது பயணத்தை ஹேமாஸ் ஹொஸ்பிட்டல்ஸ் சிறப்பாக முன்னெடுத்த வண்ணம் உள்ளது.      

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT