ஹரிரிக்கு சவூதி கட்டுப்பாடு: லெபனான் நிர்வாகம் சந்தேகம் | தினகரன்

ஹரிரிக்கு சவூதி கட்டுப்பாடு: லெபனான் நிர்வாகம் சந்தேகம்

 

லெபனானின் சுன்னி முஸ்லிம் அரசியல்வாதி சாத் பின் ஹரிரி சவூதி அரேபியாவில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக சந்தேகம் வெளியிட்டிருக்கும் லெபனான் அவரை நாட்டுக்கு திருப்பி அழைக்க வெளிநாடுகளுடன் இணைந்து செயற்படுவதாக குறிப்பிட்டுள்ளது.

ஹரிரி கடந்த சனிக்கிழமை சவூதி அரேபியாவில் இருந்து ஒரு அதிர்ச்சி தரும் அறிவிப்பாக தனது பதவியை ராஜினாமா செய்வதாக குறிப்பிட்டார். இது நாட்டில் பிராந்திய சக்திகளான ஈரான் மற்றும் சவூதிக்கு இடையில் மோதலை ஏற்படுத்துவதாக உள்ளது. ஹரிரியின் இந்த திடீர் அறிவிப்பு குறித்து லெபனானில் பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

ஹரிரி சவூதியில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதான குற்றச்சாட்டை சவூதி மறுத்தபோதும் ஹரிரி இது தொடர்பில் இதுவரை எந்த கருத்தும் வெளியிடவில்லை.

ஹரிரி ராஜினாமா அறிவிப்பை வெளியிட்டபோதும் அவர் உத்தியோகபூர்வமாக லெபனான் பிரதமராக நீடிக்கிறார்.

இது தொடர்பில் பெயர் வெளியிடாத லெபனான் அதிகாரி ஒருவர் கூறியதாவது, “ஹரிரிக்கு பயணக் கட்டுப்பாடுகள் விதித்து ரியாத் லெபனானின் இறைமைக்கு எதிராக செயற்படுகிறது. அவரின் கெளரவமே எமது கெளரவம். அவர் பெய்ரூட் திரும்ப வெளிநாடுகளுடன் இணைந்து நாம் செயற்படுவோம்” என்றார். 


Add new comment

Or log in with...