சவூதி இளவரசர் நயெப் வங்கி கணக்கு முடக்கம் | தினகரன்

சவூதி இளவரசர் நயெப் வங்கி கணக்கு முடக்கம்

சவூதி அரேபியாவின் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கையில் அண்மையில் பதவி நீக்கப்பட்ட அந்நாட்டு முன்னாள் முடிக்குரிய இளவரசர் முஹமது பின் நயெப் இலக்காகியுள்ளார்.

முஹமது பின் நயெப் மற்றும் அவரது நெருங்கிய உறவினர்கள் தொடர்புடைய வங்கிக் கணக்குகள் சவூதி நிர்வாகத்தால் முடக்கப்பட்டிருப்பதாக ரோய்ட்டர்ஸ் மற்றும் வோல் ஸ்டிரீட் ஜெர்னல் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பிலான பரீட்சயமுள்ள தரப்புகளை மேற்கோள் காட்டியே இந்த செய்தி வெளியாகியுள்ளது.

ஊழல் எதிர்ப்பு நடவடிக்கையின் கீழ் கடந்த சனிக்கிழமை பல இளவரசர்கள் உட்பட நாட்டின் முக்கிய புள்ளிகள் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையிலேயே நயெப் இலக்காகியுள்ளார். கைது செய்யப்பட்டோர் மீது பண மோசடி, ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. முடிக்குரிய இளவரசார இருந்த நயெப் கடந்த ஜூன் மாதம் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டு அந்த இடத்திற்கு மன்னர் சல்மான் அவரது மகன் முஹமது பின் சல்மானை நியமித்தார். 


Add new comment

Or log in with...