பிரிட்டனில் மற்றொரு அமைச்சர் ராஜினாமா | தினகரன்

பிரிட்டனில் மற்றொரு அமைச்சர் ராஜினாமா

பிரிட்டனில் மேலும் ஒரு அமைச்சர் பதவி விலகியுள்ளார். பிரிட்டனின் நிவாரண உதிவகளுக்கான அமைச்சர் ப்ரீதி பட்டேல், கடந்த புதன்கிழமை பதவி விலகினார்.

இஸ்ரேலியத் தலைவர்களை அதிகாரபுூர்வமற்ற முறையில் சந்தித்துப் பேசியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. ப்ரீதி பட்டேல் தனிப்பட்ட முறையில் இஸ்ரேலுக்குச் சென்றிருந்தபோது அந்தச் சந்திப்புகள் இடம்பெற்றன.

இராஜதந்திர விதிமுறைகளுக்கு மாறாக, வெளியுறவு அமைச்சுக்கோ, பிரதமர் அலுவலகத்துக்கோ தகவல் அளிக்காமல் அவர் இஸ்ரேலியத் தலைவர்களைச் சந்தித்ததாகக் கூறப்பட்டது.


Add new comment

Or log in with...