Home » ZEISS உடன் இணைந்து கண்புரை நோயாளிகளுக்காக நவீன ZEISS CT LUCIA 621P Monofocal IOL கருவியை அறிமுகம் செய்யும் DIMO Healthcare

ZEISS உடன் இணைந்து கண்புரை நோயாளிகளுக்காக நவீன ZEISS CT LUCIA 621P Monofocal IOL கருவியை அறிமுகம் செய்யும் DIMO Healthcare

by Rizwan Segu Mohideen
October 23, 2023 11:24 am 0 comment

முன்னணி பன்முகத் துறை கூட்டு நிறுவனமான DIMO நிறுவனத்தின் சுகாதாரப் பிரிவான DIMO Healthcare ஆனது, ஒளியியல் மற்றும் ஒளியியல் இலத்திரனியல் கருவிகள் துறையில் உலகளாவிய புகழ்பெற்ற தொழில்நுட்ப நிறுவனமான ZEISS உடன் இணைந்து, ZEISS CT LUCIA 621P Monofocal Intraocular Lens (IOL) கருவியை இலங்கையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புத்தாக்க கண்டுபிடிப்புக் கருவியானது கண்புரை அறுவை சிகிச்சை நடைமுறைகளை மீள்வரையறை செய்து, நோயாளிகளுக்கு மேம்பட்ட பார்வை பெறுபேறுகளை வழங்குகிறது.

ZEISS கண்புரை தீர்வு தயாரிப்புகளின் ஒரு பகுதியாக வெளியிடப்பட்டுள்ள CT LUCIA 621P Monofocal IOL கருவியானது, கண்புரை நோயாளிகளுக்கு மேம்பட்ட காட்சி பெறுபேறுகளை வழங்குவதற்கு அவசியமான கருவியாக, அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு உதவுகின்றது. ஏற்கனவே அதில் அமைக்கப்பட்டுள்ள injector ஆனது, அறுவைசிகிச்சை செயன்முறையை உள்ளுணர்வுடனும், மிருதுவாகவும், கட்டுப்பாட்டுடனும், சிக்கல்களின்றி அபாயத்தைக் குறைக்கின்றது. IOL இன் வடிவமைப்பானது, சிரமமின்றிய வகையில் மையப்படுத்தலை மேற்கொள்ள உதவுவதற்கும், capsular bag உடன் நேரடி தொடர்பை மேம்படுத்தவும் நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டமிடப்பட்ட வடிவமைப்பானது, உறுதியான அமைப்பை உறுதிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், கண்களின் இயற்கையான அமைவிடத்தில் ஒரு நிலையான இடத்தை நோக்குவதற்கு உதவுகிறது. இதன் மூலம் நோயாளிகளுக்கு நம்பகமான மற்றும் நீடித்த தீர்வை அது வழங்குகிறது.

இந்த வெளியீட்டு நிகழ்வில் கருத்துத் தெரிவித்த ZEISS குழுமத்தின் SAARC பிராந்தியத் தலைவர் விகாஸ் சக்சேனா, “ZEISS CT LUCIA 621P Monofocal IOL கருவியை இலங்கை சந்தையில் அறிமுகப்படுத்துவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். இந்த புத்தாக்க கண்டுபிடிப்பான IOL, கண் பராமரிப்பு தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல் மற்றும் கண்புரை நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல் ஆகிய எமது அசைக்க முடியாத அர்ப்பணிப்பின் விளைவாக உருவாக்கப்பட்டுள்ளது. அதன் காப்புரிமை பெற்ற ZO Asphericity எண்ணக்கரு மற்றும் பயனர் நட்பு வடிவமைப்பு மூலம், இந்த கருவியானது, இலங்கையில் உள்ள அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு ஒப்பிட முடியாத காட்சி பெறுபேறுகளை பெறுவதற்கு உதவும் என்று நாம் நம்புகிறோம். 

அதிநவீன ஒளியியல் தீர்வுகளை வழங்குவதில் ZEISS நீண்டகால நற்பெயரைக் கொண்டுள்ளதோடு, இந்த சமீபத்திய புத்தாக்க கண்டுபிடிப்பானது இலங்கையில் உள்ள கண் மருத்துவ சமூகத்திற்கு அதிநவீன தொழில்நுட்பத்தை வழங்குவதற்கு நாம் கொண்டுள்ள உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறது.” என்றார்.

DIMO குழுமத்தின் Healthcare பிரிவை மேற்பார்வையிடும் DIMO நிறைவேற்றுப் பணிப்பாளர் விஜித் புஷ்பவெல இங்கு தெரிவிக்கையில், “சுகாதாரமான நாட்டைக் கட்டியெழுப்பும் அதே வேளையில், இலங்கையர்களின் கனவுகள் மற்றும் அபிலாஷைகளை ஊக்குவிப்பதற்காக நாட்டிற்கு அதிநவீன தொழில்நுட்பத்தை கொண்டு வருவதில் DIMO Healthcare எப்போதும் முன்னணியில் இருந்து வருகின்றது. ZEISS CT LUCIA 621P Monofocal IOL போன்ற சமீபத்திய புத்தாக்க கண்டுபிடிப்புகளை இலங்கைக்கு அறிமுகப்படுத்த, உலகளாவிய ரீதியில் ஒளியியல் விஞ்ஞானத்தில் முன்னோடியாக திகழும் Carl Zeiss உடன் கைகோர்ப்பதை உண்மையில் ஒரு பாக்கியமாக கருதுகிறேன். இலங்கையில் ZEISS இன் உள்ளூர் பிரதிநிதி எனும் வகையில், நாட்டின் முதலாவது Wide Angle Fundus Phototherapy மற்றும் Multi Spot Green Laser சிகிச்சை நுணுக்குக்காட்டி கருவிகளை DIMO அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பல்வேறு வகையான நோயாளிகளுக்கு சுகாதார தீர்வுகளை வழங்க நிறுவனம் உதவியுள்ளதோடு, சுகாதாரத் துறையில் சேவை வழங்குவோருக்கும் நோயாளிகளுக்கும் உயர் வசதிகளை நிறுவனம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.” என்றார்.

காப்புரிமை பெற்ற ZEISS Optic (ZO) Asphericity Concept எண்ணக்கருவை கொண்டுள்ள ZEISS CT LUCIA 621P Monofocal IOL கருவியானது, கண் மருத்துவ உலகிற்கு குறிப்பிடும்படியான சேர்க்கையாக இணைகின்றது. இந்த புத்தாக்க தொழில்நுட்பம் பரந்த அளவிலான கண் கோளத்தின் மாறுபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதோடு, வில்லையின் தவறான அமைவிடம் மற்றும் குவியப்படுத்தல் சந்தர்ப்பங்களிலும் கூட சிறந்த காட்சிப் பெறுபேறுகளை உறுதி செய்கிறது. இந்த அற்புதமான அம்சமானது, கண்புரை அறுவை சிகிச்சை துறையில் புரட்சியை ஏற்படுத்தும் CT LUCIA 621P கருவியை தனித்துவமாக்குகிறது.

இந்த சமீபத்திய அறிமுகத்திற்கு மேலதிகமாக, ZEISS ஆனது இலங்கையில் உள்ள கண் வைத்தியர்களுக்கு சிறந்த நோயாளர் பெறுபேறுகளை உறுதிப்படுத்தும் வகையில், Trifocal மற்றும் Extended Depth of Focus (EDOF) போன்ற தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட IOL கருவிகளை படிப்படியாக அறிமுகப்படுத்தவுள்ளது.

கண்புரை அறுவை சிகிச்சை ஆனது உலகில் மிகவும் பொதுவாக மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சை முறைகளில் ஒன்றாகும் என்பதோடு, ZEISS CT LUCIA 621P Monofocal IOL இன் அறிமுகமானது, இந்த செயன்முறையை மேலும் பயனுள்ளதாகவும் நம்பகமானதாகவும் மாற்ற உறுதியளிக்கிறது.

ZEISS CT LUCIA 621P Monofocal IOL பற்றி மேலும் அறிந்து கொள்ள்ள…

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT