20க்கு 20 தரவரிசையில் நீடிக்கும் பாகிஸ்தான் அணி | தினகரன்

20க்கு 20 தரவரிசையில் நீடிக்கும் பாகிஸ்தான் அணி

இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட ரி 20 தொடரில் இந்தியஅணி நியூசிலாந்தை வீழ்த்தியதன் மூலம் நியூசிலாந்தின் முதலிடம் பறிபோயுள்ளது.

இந்த தொடர் ஆரம்பமாவதற்கு முன்னர் தரவரிசையில் முதலிடத்தில் நீடித்த நியூசிலாந்து ,இந்தியாவிடம் கண்ட தோல்விகள் காரணமாக இரண்டாவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளது.

சப்ராஸ் அஹமட் தலைமையில் தொடர்ச்சியாக ரி20 போட்டிகளில் திறமையை வெளிப்படுத்தி வந்தபாகிஸ்தான் அணி தொடர்ந்தும் 124 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கின்றது.

நியூசிலாந்து 120 புள்ளிகளுடன் 2 வது இடத்திலும், மேற்கிந்திய தீவுகள் 120

புள்ளிகளுடன் 3 வது இடத்திலும், இங்கிலாந்து, இந்திய அணிகள் தலா 119 புள்ளிகளுடன்முறையே நான்காம்,ஐந்தாம் இடங்களிலும் நீடிக்கின்றன.

தென் ஆபிரிக்க, அவுஸ்திரேலிய, இலங்கை, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் அணிகள் அடுத்தடுத்தஇடங்களை பிடித்துள்ளன. 


Add new comment

Or log in with...