மஹிந்தவின் பிரதான அலுவலர் காமினி செனரத் நீதிமன்றில் சரண் | தினகரன்

மஹிந்தவின் பிரதான அலுவலர் காமினி செனரத் நீதிமன்றில் சரண்

 
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காரியாலய சிரேஷ்ட உத்தியோகத்தரான அதிகாரி காமினி செனரத் இன்று (09) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.
 
கடந்த ஆட்சியில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடி தொடர்பில் காமினி செனரத் அடங்கலான சந்தேகநபர்களுக்கு எதிராக நீதவான் நீதிமன்றத்தில் நிதி மோசடி விசாரணைப் பிரிவு அறிக்கை சமர்ப்பித்திருந்தது. 
 
ஊழியர் சேமலாப நிதியம் (EPF) மற்றும் ஶ்ரீ லங்கா இன்சுரன்ஸ் நிறுவனங்களிலிருந்து பாரிய அளவிலான நிதி மோசடியை மேற்கொண்டு, தனிப்பட்ட ரீதியிலான நிறுவனமொன்றை நடாத்திச் சென்றதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
குறித்த நிறுவனத்தின் பங்குதாரர்களான பியாச குடபாலகே மற்றும் நீல் பண்டார ஆகியோர், குறித்த வழக்கின் மற்றைய பிரதிவாதிகளாவர்.
 
குறித்த விடயம் தொடர்பான வழக்கு விசாரணைக்காக இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜராகவுள்ளதாக, அவரது சட்டத்தரணிகள் கடந்த திங்கட்கிழமை (06) உச்ச நீதிமன்றத்தில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
குறித்த விடயம் தொடர்பில், அரச சொத்துக்கள் சட்டத்தின் கீழ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால், நீதிமன்ற விசாரணைக்காக அவர் கைது செய்யப்படுவதை தவிர்க்கும் முகமாக அவரால் அடிப்படை உரிமை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
 

Add new comment

Or log in with...