பட்ஜட்டுக்கு முன் ஆறு பொருட்களுக்கு வரி குறைப்பு | தினகரன்

பட்ஜட்டுக்கு முன் ஆறு பொருட்களுக்கு வரி குறைப்பு

 

இன்று நள்ளிரவு (09) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஆறு அத்தியவசிய பொருட்களுக்கான விசேட வர்த்தக வரிகள் குறைக்கப்பட்டுள்ளன.

கொழும்பிலுள்ள நிதியமைச்சு அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர இன்று (08) பிற்பகல் இதனை அறிவித்தார்.

அதன் அடிப்படையில், பின்வரும் ஆறு பொருட்களின் ஒரு கிலோவிற்கான விசேட வர்த்தக பொருள் வரிகள் குறைக்கப்பட்டுள்ளன.

விதை உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், பருப்பு, கருவாடு, தேங்காய் எண்ணெய் மற்றும் மரக்கறி எண்ணெய் ஆகிய பொருட்களின் வரிகளே இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளன.

அதன்படி,

1. விதை உருளைக்கிழங்கு - ரூபா 39 இனால்
2. பெரிய வெங்காயம் - ரூபா 39 இனால்
3. தேங்காய் எண்ணெய் - ரூபா 25 இனால்
4. மரக்கறி - ரூபா 25 இனால்
5. பருப்பு - ரூபா 12 இனால்
6. கருவாடு - ரூபா 50 இனால் குறைக்கப்பட்டுள்ளது.

 
 

 


Add new comment

Or log in with...