காமினி செனரத் நீதிமன்றில் சரணடையவுள்ளார் | தினகரன்

காமினி செனரத் நீதிமன்றில் சரணடையவுள்ளார்

 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆளணியின் பிரதம அதிகாரி காமினி செனரத் எதிர்வரும் (09) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராக தயாராக இருப்பதாக அவரின் சட்டத்தரணிகள் நேற்று (06) உச்ச நீதிமன்றத்தில் அறிவித்தார்கள்.

அரச சொத்துக்கள் சட்டத்தின் கீழ் நீதிமன்ற விசாரணைக்காக நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்படுவதை தவிர்க்கும் முகமாக இவர் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மனுமீதான விசாரணை நேற்று இடம்பெற்றது.

இதன் போதே அவரின் சட்டத்தரணிகள் அவர் சரணடையத் தயாராக இருப்பதாக அறிவித்தனர்.

கடந்த ஆட்சியில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடி தொடர்பில் காமினி செனரத் அடங்கலான சந்தேகநபர்களுக்கு எதிராக நீதவான் நீதிமன்றத்தில் நிதி மோசடி விசாரணைப் பிரிவு அறிக்கை சமர்ப்பித்திருந்தது. 


Add new comment

Or log in with...