26 இளம் பெண்கள் கடலில் சடலமாக மீட்பு | தினகரன்

26 இளம் பெண்கள் கடலில் சடலமாக மீட்பு

மத்தியதரைக் கடலில் இருந்து கடந்த ஞாயிறன்று மீட்கப்பட்ட 26 பதின்ம வயது பெண்களின் மரணம் குறித்து இத்தாலி அரச வழக்கறிஞர்கள் விசாரணை ஆரம்பித்துள்ளனர்.

மத்தியதரைக் கடலை கடக்கும் முயற்சியின்போது இந்த பெண்கள் கற்பழித்து கொல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பில் தெற்கு துறைமுகமான சலெர்னோவில் ஐந்து தஞ்சம் கோரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

உயிரிழந்த பெண்களின் சடலங்கள் மற்றும் 375 குடியேறிகளை ஏற்றிய ஸ்பெயின் போர் கப்பல் ஒன்று அந்த துறைமுகத்தை அடைந்துள்ளது.

இறந்த பெண்களில் 23 பேர் மேலும் 64 பேருடன் ரப்பர் படகில் பயணித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் 14 முதல் 18 வயது கொண்டவர்களாவர்.

உயிர்பிழைத்த 375 பேரில் பெரும்பாலானவர்கள் துணை சஹாரா ஆபிரிக்க நாடுகளை சேர்ந்தவர்களாவர். இவர்களில் உள்ள 90 பெண்களில் எட்டுப் பேர் கர்ப்பமுற்றவர்கள் என்பதோடு 52 சிறுவர்களும் இருந்துள்ளனர்.

இந்த தஞ்சம் கோரிகள் லிபியா ஊடாக மத்திய தரைக்கடலை கடந்து இத்தாலியை அடைய முயற்சித்துள்ளனர். இதற்காக இவர்கள் ஆட்கடத்தல்காரர்களுக்கு 6,000 டொலர்கள் வரை செலுத்துகின்றனர். 


Add new comment

Or log in with...