Thursday, March 28, 2024
Home » இலங்கையில் முதல்முறையாக பெண்களால் இயக்கப்படும் லங்கா IOC எரிபொருள் நிரப்பு நிலையம் திறப்பு

இலங்கையில் முதல்முறையாக பெண்களால் இயக்கப்படும் லங்கா IOC எரிபொருள் நிரப்பு நிலையம் திறப்பு

by Rizwan Segu Mohideen
October 9, 2023 11:17 am 0 comment

ஒரு வரலாற்று சாதனைமிக்க நிகழ்வாக, இலங்கையில் முதன்முறையாக, மத்திய கண்காணிப்புடனான, முழுமையாக தன்னியக்கமயமாக்கப்பட்ட, பெண்களால் இயக்கப்படும் லங்கா ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையம் சமீபத்தில் வெகு விமரிசையாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வானது வலுவூட்டல், உள்ளடக்கம் மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு ஆகியவற்றைக் குறிக்கிறது. கொழும்பின் மையப்பகுதியில், வைத்தியசாலை சதுக்கத்தில் அமைந்துள்ள இது, கடந்த இரண்டு தசாப்தங்களில் நகர எல்லைக்குள் திறக்கப்பட்ட முதலாவது புதிய எரிபொருள் நிரப்பு நிலையம் என்பதுடன், அதன் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 24 மணிநேரமும் சேவைகளை வழங்கும். வைத்தியசாலைக்கு அருகாமையில் இருப்பதால், வைத்தியர்கள், நோயாளர்கள் மற்றும் வருகை தருகின்ற அனைவரும் அத்தியாவசிய சேவைகளை எளிதாக பெற்றுக்கொள்வதை உறுதி செய்கிறது.

ஒரு எரிபொருள் நிலையம் என்பதற்கும் அப்பால், இந்த முயற்சியானது பெண்களுக்கு வலுவூட்டுதல் மற்றும் தொழில்முறை பணிநிலைகளை பன்மைத்துவப்படுத்துவது ஆகியவற்றைப் பொறுத்தவரையில் ஒரு முன்னேற்றத்தைப் பிரதிபலிக்கிறது. இந்த தூரநோக்குடனான திட்டத்தின் பின்னணியில் இது இலங்கையின் மிகப்பெரிய விசேட வைத்தியசாலையாகவும், மகளிர் மற்றும் சிறுவர்களின் ஆரோக்கியத்தில் ஒரு அசைக்கமுடியாத அக்கறையாளராகவும் அறியப்படுகின்ற நைன்வெல்ஸ் ஹொஸ்பிட்டல்ஸ் உள்ளது. நைன்வெல்ஸ் ஹொஸ்பிட்டல்ஸ் ஐநா சர்வதேச உடன்படிக்கையின் பெண்கள் சமத்துவ திட்டத்தில் ஒரு பங்கேற்பாளராகவும் உள்ளதுடன், இது உலகளாவிய அளவில் பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதற்கான அதன் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

லங்கா ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையம், அதிநவீன தொழில்நுட்பத்தை தழுவி, எரிபொருள் நிரப்பும் அனுபவத்திற்கு மீள்வரைவிலக்கணம் வகுத்துள்ளது. அதன் மையத்தில் புரட்சிகரமான NPND கட்டமைப்பு உள்ளது, இது ‘அச்சு இல்லை, வழங்கல் இல்லை” ( No Print, No Delivery) என்பதன் சுருக்கமாகும். இது செயல்திறன் மற்றும் வாடிக்கையாளர் திருப்தியை மேம்படுத்தும் தன்னியக்கமயமாக்கத்தின் அற்புதமான ஆற்றலுடன், பரிவர்த்தனைகளை நெறிப்படுத்துகிறது. முந்தைய பரிவர்த்தனைக்கான ரசீது வெற்றிகரமாக வழங்கப்பட்டால் மட்டுமே அடுத்த வாடிக்கையாளருக்கு எரிபொருள் வழங்கப்படுவதை இந்த கட்டமைப்பு உறுதி செய்கிறது.

கௌரவ டி.வி.சானக – மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர், கலாநிதி சத்யாஞ்சல் பாண்டே – இலங்கைக்கான இந்தியாவின் பிரதி உயர் ஸ்தானிகர், சுமல் பெரேரா – அக்சஸ் குழும நிறுவனங்களின் தலைவர் மற்றும் தீபக் தாஸ் – லங்கா ஐஓசி பிஎல்சியின் முகாமைத்துவப் பணிப்பாளர் அடங்கலாக பல முக்கிய அதிதிகள் திறப்பு விழாவில் கலந்து சிறப்பித்துள்ளனர்.

இராஜாங்க அமைச்சர் கௌரவ சானக அவர்கள் கருத்து தெரிவிக்கையில், “நான் இதுவரை பார்வையிட்டவற்றில் மிகச்சிறந்த எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இதுவும் ஒன்று என்பதில் சந்தேகமில்லை. லங்கா ஐஓசி, நைன்வெல்ஸ் மற்றும் அக்சஸ் குழுமம் போன்ற பெருநிறுவனங்களின் கூட்டாண்மை மூலம் அடையப்பெற்ற இத்தகைய சாதனைகளைக் கண்டு நான் வியக்கின்றேன்.  இலங்கையின் அபிவிருத்தியை துரிதப்படுத்த எமக்கு இத்தகை கூட்டாண்மைகளே அவசியம் என்பதுடன், அனைவருக்கும் எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்,” என்று குறிப்பிட்டார். 

இப்புதிய எரிபொருள் நிரப்பு நிலையமானது, மசகு எண்ணெய்கள் (lubricants) மற்றும் லாஃப்ஸ் திரவ பெட்ரோலியம் எரிவாயு சிலிண்டர்களுடன் சேர்த்து, LP 92, LP 95, லங்கா ஓட்டோ டீசல், லங்கா சூப்பர் டீசல், எக்ஸ்ட்ரா பிரீமியம் யூரோ 3, மற்றும் எக்ஸ்ட்ரா மைல் டீசல் உள்ளிட்ட பல்வேறு வகையான எரிபொருட்களில் துல்லியமான மற்றும் சந்தை நிலவரங்களுக்கேற்ப புதுப்பித்த விலைகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் தன்னியக்கமயமாக்க விலையீட்டையும் கொண்டுள்ளது.

இலங்கைக்கான இந்தியாவின் பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்யாஞ்சல் பாண்டே அவர்கள் கருத்து வெளியிடுகையில், “எரிபொருள் நிலையங்கள் வெறும் மீள்நிரப்பும் இடங்களுக்கு அப்பாற்பட்டவையாக மாறிவிட்டன. அவை ஒரு சௌகரியத்திற்கான  மையமாக மாறியுள்ளதுடன், இலங்கையில் நவீன எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு ஒரு உண்மையான சௌகரியத்திற்கு அர்த்தம் கற்பிக்கும் வகையில், இத்தகைய தரஒப்பீட்டை உருவாக்க இந்தத் தொழில்துறை தலைமை நிறுவனங்களுடன் கைகோர்த்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்,”என்று குறிப்பிட்டார்.  

எரிபொருளுக்கு அப்பால், இந்த நிலையம் முழுமையான வாகன பேணற்சேவைகளை வழங்குகிறது. முழுமையான உட்புற தூய்மைப்படுத்தல் முதல் டயர் மற்றும் சக்கர சீரமைப்பு வரை, உங்கள் வாகனம் ஒரு போக்குவரத்து சாதனம் மட்டுமல்ல, உங்கள் வாழ்க்கை முறை மற்றும் ஆளுமையின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை உறுதி செய்கின்றது. அத்தோடு, உங்கள் சுவையரும்புகளைக் கவரும் வகையில், கஃபே 9 (Café 9) என்ற ஒரு மகிழ்ச்சிகரமான உணவு விடுதி உங்களுக்காகக் காத்திருக்கிறது. அக்சஸ் மோட்டர்ஸ் வழங்கும் முழுமையான உட்புற தூய்மைப்படுத்தல் சேவை மற்றும் டயர் விற்பனை மையம் ஆகியன, உட்புற மற்றும் வெளிப்புற துப்புரவு சேவைகளில் நிபுணத்துவம் பெற்றதுடன், உங்கள் வாகனத்தை மிகுந்த கவனத்துடனும். அவதானத்துடனும் சேவைக்குட்படுத்தி, நீங்கள் கொடுக்கின்ற பணத்திற்கான சிறந்த மதிப்பை வழங்குகிறது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT