சலீல மூனசிங்க உள்ளிட்ட நால்வருக்கும் பிணை | தினகரன்

சலீல மூனசிங்க உள்ளிட்ட நால்வருக்கும் பிணை

கடந்த ஒக்டோபர் 09 ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சலீல மூனசிங்க உள்ளிட்ட 4 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தாய்வான் பா ஈஸ்ட் வங்கியின் கணனி வலையமைப்பினுள் சட்டவிரோதமாக நுழைந்து 2,104  மில்லின் அமெரிக்க டொலர்களை (ரூபா 3,000 இலட்சம்) தங்களது சொந்த கணக்கிற்கு மாற்றிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்களே இவ்வாறு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் இன்று (06) கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போது நீதவான் அவர்களுக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கினார்.

நால்வருக்கும், தலா 50 ஆயிரம் ரொக்கம் ரூபாய் 5 இலட்சம் கொண்ட 3 சரீர பிணையிலும் (12 சரீர பிணைகளில்) விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சலீல மூனசிங்க, ஜனக சமிந்த நம்முணி, சூலபால லலிந்திர சில்வா, பந்துல வீரவர்தன ஆகியோரே இவ்வாறு பிணையில் விடுதலை செய்யப்பட்டவர்களாவர்.

பிணை வழங்குவோரில் ஒருவர் குடும்ப உறுப்பினராக இருக்க வேண்டும் என நிபந்தனை விதித்த நீதவான், குறித்த நபர்களுக்கு வெளிநாடு செல்ல தடை விதித்ததோடு, அவர்களது கடவுச்சீட்டுகளை நீதிமன்றில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.

குறித்த நபர்களிடமிருந்த கணனி மற்றும் கையடக்க தொலைபேசிகளை, இரசாயன பகுப்பாய்வுக்குட்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக குற்ற புலனாய்வு திணைக்களம் நீதிமன்றிற்கு தெரியப்படுத்தியிருந்தது.

 


Add new comment

Or log in with...