எரிபொருள் பிரச்சினையை ஆராய மூவரடங்கிய குழு | தினகரன்

எரிபொருள் பிரச்சினையை ஆராய மூவரடங்கிய குழு

 

எரிபொருள் பிரச்சினையை உடனடியாக தீர்க்கும் வகையில், அமைச்சர்கள் மூவர்  கொண்ட அமைச்சரவை உப குழுவொன்றை ஜனாதிபதி நியமித்துள்ளார்.

பாட்டலி சம்பிக்க ரணவக்க, சரத் அமுணுகம, அநுரபிரியதர்ஷன யாபா ஆகிய அமைச்சர்களே இந்த குழுவில் அடங்குகின்றனர்.

தற்போது நிலவுகின்ற எரிபொருள் தட்டுப்பாட்டை உடனடியாக தீர்க்கும் வகையில், நாளைய தினம் பெட்ரோலுடனான கப்பல் ஒன்று வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை மறுதினம் இந்தியாவிலிருந்து மற்றுமொரு கப்பல் வரவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (07) பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...