Thursday, April 18, 2024
Home » ஆசிய பாரா விளையாட்டுப் போட்டி; இலங்கைக்கு மேலும் இரு வெள்ளி

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டி; இலங்கைக்கு மேலும் இரு வெள்ளி

by Rizwan Segu Mohideen
October 28, 2023 9:42 am 0 comment

சீனாவின் ஹான்சு நகரில் இடம்பெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் பேட்டியில் இலங்கை மேலும் இரு பதக்கங்களை வென்றுள்ளது.

இலங்கையின் அனில் பெரேரா நேற்று (27) நடைபெற்ற ஆண்களுக்கான 100 மீற்றர் (டீ63) போட்டியில் 12.98 விநாடிகளில் போட்டித் தூரத்தை நிறைவு செய்து இரண்டாவது இடத்தை பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

இலங்கை பாரா தடகள வீரர் நுவன் இந்திக்க ஆண்களுக்கான நீளம் பாய்தல் (டீ64) போட்டியில் மற்றொரு வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.

இதன்படி இம்முறை ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் இலங்கை இதுவரை மொத்தமாக எட்டுப் பதக்கங்களை வென்றுள்ளது. இதில் இரு தங்கம், நான்கு வெள்ளி மற்றும் இரு வெண்கலப் பதக்கங்கள் அடங்கும்.

இதில் சீனா பதக்கப்பட்டியலில் முதல் இடத்தில் இருப்பதோடு இலங்கை 33 நாடுகள் போட்டியிட்டிருக்கும் இந்த விளையாட்டு விழாவில் 18 ஆவது இடத்தில் உள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT