பல்கலைக்கழக மாணவ அழைப்பாளர்களுக்கு பிணை | தினகரன்

பல்கலைக்கழக மாணவ அழைப்பாளர்களுக்கு பிணை

 

அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தின் (IUSF) அழைப்பாளர் லஹிரு வீரசேகர மற்றும் அனைத்து பல்கலை பிக்கு மாணவர் (IUBF) ஒன்றியத்தின் அழைப்பாளர் தெம்பிட்டியே சுகதானந்த தேரர் ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இன்று (31) கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது நீதவான் அவர்களுக்கு பிணையில் செல்ல அனமதி வழங்கினார்.

தலா ரூபா இரண்டு இலட்சம் கொண்ட பிணைகளில் அவர்களை விடுவித்தார்.

SAITM தனியார் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை வழி நடாத்திய இவர்கள், நீதிமன்ற உத்தரவை மீறி செயற்பட்டமை, பிணை விதிகளை மீறயமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் கடந்த ஒக்டோபர் 12 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...