குரல்கள் இயக்கத்தினால் எல்லை நிர்ணய முன்மொழிவுகள் கையளிப்பு | தினகரன்

குரல்கள் இயக்கத்தினால் எல்லை நிர்ணய முன்மொழிவுகள் கையளிப்பு

 

மாகாண சபை தேர்தல் தொகுதிகள் தொடர்பான எல்லை நிர்ணய முன்மொழிவுகள் சம்பந்தமாக குரல்கள் இயக்கம் நிறைவு செய்த இறுதி அறிக்கை, அவ்வியக்கத்தின் உறுப்பினர்ளாகளால் நேற்று முன்தினம் (01) புதன்கிழமை எல்லை வரைபு ஆணைக்குழுவின் செயலாளர் சமன் ஶ்ரீ ரத்நாயக்கவிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது.

மாகாண சபைத் தொகுதிகளுக்கான எல்லை நிர்ணய  எழுத்து மூல முன்மொழிவுகளை வழங்கும் இறுதித் திகதி நேற்று (02) ஆகும்.
இது தொடர்பில் கடந்த ஒக்டோபர் 13 ஆம் திகதி, எல்லை நிர்ணய ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்ட அறிவித்தலிலேயே இவ்விடயம் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஒரு சிவில் அமைப்பு  என்ற ரீதியில் குரல்கள் இயக்கத்தின் 15 பேர் கொண்ட ஆய்வுக்குழு இது சம்பந்தமான ஆய்வில் ஈடுபட்டு, குறிப்பாக முஸ்லிம்கள் செறிவாக வாழும் பிரதேசங்களில் மாகாண சபைகளுக்கான பிரதிநிதித்துவம் பாதிக்கப்படாதவாறு எவ்வாறு எல்லை நிர்ணயம் செய்ய முடியும் என்பது சம்பந்தமான முன்மொழிவுகளை அறிக்கையாகத் தயாரித்திருந்தது.

அதன் அடிப்படையில், எல்லை நிர்ணய முன்மொழிவுகள் தொடர்பில் குரல்கள் இயக்கத்தினால் தயாரிக்கப்பட்ட இறுதி அறிக்கையை அதன் உறுப்பினர்களான ஆய்வாளர் தில்ஷான் முஹம்மட், ஊடகவியலாளர் றிஸ்வான் சேகு முஹைதீன், சட்டத்தரணி முஹைமின் காலித், சட்டத்தரணி அஷார் லதீப் மற்றும் சட்டத்தரணி றதீப் அஹ்மத் ஆகியோர் ஒன்றிணைந்து கையளித்தனர்.

குரல்கள் இயக்கத்தின் எல்லை நிர்ணய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முன்மொழிவுகளின் பிரகாரம் எல்லை நிர்ணயங்கள் செய்யப்படுவதற்கு அனைத்து முஸ்லிம் சிவில் அமைப்புகளும், முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம், பாதிக்கப்படும் முஸ்லிம் மாகாண சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் கணிசமாகப் பாதுக்காக்க முடியும் என்று குரல்கள் இயக்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

குரல்கள் இயக்கத்தி எல்லை நிர்ணய முன்மொழிவு அறிக்கை...

 


Add new comment

Or log in with...