Thursday, April 25, 2024
Home » சீனாவின் முன்னாள் பிரதமர் காலமானார்

சீனாவின் முன்னாள் பிரதமர் காலமானார்

by Rizwan Segu Mohideen
October 29, 2023 2:46 pm 0 comment

சீனாவின் முன்னாள் பிரதமர் லி கெச்சியாங் தனது 68ஆவது வயதில் காலமானார்.

மறைந்த லி அண்மைக் காலமாக ஷாங்ஹாயில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்ததாகச் சீனாவின் சிசிடீவி ஊடகம் தெரிவித்தது.

கடந்த வியாழக்கிழமை (26) லி-க்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகவும் சிகிச்சைப் பலனளிக்காததால் நள்ளிரவு வாக்கில் அவர் உயிர் பிரிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

மறைந்த லி ஜனாதிபதி ஷி ஜின்பிங் தலைமையில் சீனப் பிரதமராகவும் சீன அமைச்சரவைத் தலைவராகவும் பத்தாண்டுகள் பணியாற்றியவர்.

பிரதமர் பொறுப்பில் இரண்டாம் தவணை நிறைவடைந்ததும் இந்த ஆண்டு மார்ச் மாதம் லி பதவி விலகினார்.

1955ஆம் ஆண்டு அன்ுஹய் மாகாணத்தில் பிறந்த லீ கெகியாங், ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராகத் தொடங்கி அரசியலில் நுழைந்தார். அவர் மாகாண பதவிகள் மற்றும் அமைச்சகங்களில் பணியாற்றிய பின் 2007இல் கட்சியின் மத்திய குழுவில் சேர்ந்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT