பதவி விலக்கப்பட்ட துலிப் விஜேசேகர மஹிந்த அணியில் | தினகரன்


பதவி விலக்கப்பட்ட துலிப் விஜேசேகர மஹிந்த அணியில்

 
பிரதியமைச்சு பதவியிலிருந்து விலக்கப்பட்ட துலிப் விஜேசேகர ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் இணைந்து கொள்ளப்போவதாக அறிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு எதிர்த்து, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியுடன் இணைந்து செயற்பட தீர்மானித்தள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று (30) காலை பாராளுமன்றம் கூடிய வேளையில், எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

துலிப் விஜேசேகர தபால் சேவைகள் பிரதி அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடன் பணிப்புரைக்கு அமைய நேற்றைய தினம் (29) அமுலுக்கு வரும் வகையில் அவர் பதவி நீக்கம் செய்யப்படுவதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்திருந்தது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான துலிப் விஜேசேகர, பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி விமர்சனத்திற்குள்ளானதோடு, கடந்த காலங்களில் அரசாங்கத்தை விமர்சிக்கும் வகையில் கருத்து வெளியிட்டு வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...