கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் மாணவர்கள் கைது | தினகரன்


கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் மாணவர்கள் கைது

 

திருகோணமலை, அநுராதபுரச் சந்தியிலுள்ள பிரபல பாடசாலையொன்றின் விளையாட்டு மைதானத்துக்குள் கேரளக் கஞ்சாவை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில், மாணவர்கள் மூவர், நேற்று (24) மாலை கைது செய்யப்பட்டுள்ளனரென, உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

காந்திநகர், மட்கோ ஆகிய இடங்களைச் சேர்ந்த 11ஆம், 12ஆம் வகுப்பு மாணவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனரெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட மாணவர்களை, திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் உப்புவெளி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

(முள்ளிளிப்பொத்தா குருப் நிறூபர் - எச். ஹலீம்)

 


Add new comment

Or log in with...