5th ODI: SLvPAK; துடுப்பாட்டத்தில் தடுமாறி வரும் இலங்கை | தினகரன்

5th ODI: SLvPAK; துடுப்பாட்டத்தில் தடுமாறி வரும் இலங்கை

(வைப்பக படம்)
 
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் சாஜாவில் இடம்பெற்று வரும் ஐந்தாவதும் இறுதியுமான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி துடுப்பாட்டத்தில் தடுமாற்றத்தை சந்தித்துள்ளது.
 
ஏற்கனவே இடம்பெற்ற நான்கு போட்டிகளிலும் தோல்வியுற்று துடுப்பாட்டத்தில் தடுமாறி வரும் இலங்கை அணியில், இன்றைய போட்டிக்கு விஷ்வ பெனாண்டோ, துஷ்மந்த சமீர, ஜெப்ரி வந்தர்சே ஆகிய பந்துவீச்சாளர்கள் அணியில் இணைக்கப்பட்டுள்ளதோடு, அகில தனஞ்சய, லஹிரு கமகே, சுரங்க லக்மால் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
 
இன்றைய (23) போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
 
அதன் அடிப்படையில் ஆடுகளம் நுழைந்த இலங்கை அணி, 6.3 ஓவர்கள் முடிவில் 20 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து துடுப்பெடுத்தாடி வருகின்றது.
 
பந்துவீச்சில் உஸ்மான் கான் 5 ஓவர்கள் பந்து வீசி 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
 
ஆடுகளத்தில்
லஹிரு திரிமான்ன
சீக்குகே பிரசன்ன ஆகியோர் துடுப்பெடுத்தாடி வருகின்றனர்.
 
உஸ்மான் கான் 5/24
 

Add new comment

Or log in with...