திருக்கோவில் பிரதேசத்தில் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது | தினகரன்

திருக்கோவில் பிரதேசத்தில் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது

அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாகாமம் முறான வட்டி பகுதியில் வைத்து சட்ட விரோத மண்ணகழ்வில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த ஆறு பேரும் நேற்று (22) ஞாயிற்றுக்கிழமை மாலை மூன்று உழவு இயந்திரம் உட்பட ஆற்று மண்ணுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருக்கோவில் பிரதேசத்தில் சாகாம் பகுதியில் தொடர்ச்சியாக சட்டவிரோத ஆற்றுமண் அகழ்வு இடம்பெற்று வருவதாக திருக்கோவில் பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, திருக்கோவில் சாகாமம் விசேட அதிரப்படையினரும் திருக்கோவில் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி மொகமட் சதாத் தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது  மேற்படி சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிசாரின் விசாரனைகளை அடுத்து நாளை (24) செவ்வாய்க்கிழமை சந்தேகநபர்களையும் கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்தள்ளனர். 

(திருக்கோவில் தினகரன் நிருபர் - எஸ். கார்த்திகேசு)
 


Add new comment

Or log in with...