யாழில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான இளைஞன் உயிரிழப்பு | தினகரன்

யாழில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான இளைஞன் உயிரிழப்பு

யாழ்ப்பாணம்  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  அரியாலை  மணியம் தோட்டம் பகுதியில்  துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்ட  இளைஞர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

நேற்றிரவு (22) 09.30 மணியளவில் அவர் உயிரிழந்ததாக யாழ் போதனா வைத்தியசாலை  வட்டாரங்கள் தெரிவித்தன.

(சுமித்தி தங்கராசா)

யாழ்ப்பாணம் போதனா மருத்துவனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

அதிக இரத்தப்போக்குக் காரணமாகவே அவரைக் காப்பாற்ற முடியாமல் போயுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்ககின்றன.

இளைஞன்  மரணமடைந்ததைத் தொடர்ந்து யாழ் நகரில் தற்பொழுது விசேட அதிரடிப்படையினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார்  மேற்கொண்டுவரும் நிலையிலேயே யாழ் நகரமெங்கும் மேலதிக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

(பாறுக் ஷிஹான் - புங்குடுதீவு குறுப் நிருபர்)

 


Add new comment

Or log in with...