Home » சட்டவிரோத மதுபான விற்பனை; வீட்டின் அழைப்பு மணியை அடித்தால் மதுபானம்

சட்டவிரோத மதுபான விற்பனை; வீட்டின் அழைப்பு மணியை அடித்தால் மதுபானம்

- நடவடிக்கை எடுக்குமாறு அங்கஜன் கோரிக்கை

by Prashahini
October 26, 2023 3:40 pm 0 comment

யாழ்ப்பாணம் – வடமராட்சி, உடுப்பிட்டி பகுதியில் சட்டவிரோத மதுபான சாலை ஒன்று இயங்கி வருவதாகவும் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று (26) இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் போதே அங்கஜன் இராமநாதனால் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

உடுப்பிட்டி மக்கள் வங்கிக்கு அருகில் உள்ள வீடு ஒன்றில் சட்டவிரோதமான மதுபானசாலை ஒன்று இயங்கி வருகின்றது. அந்த வீட்டுக்கு செல்வோர் வீட்டின் அழைப்பு மணியை (Calling Bell) அடித்து உள்ளே சென்று மதுபானத்தை கொள்வனவு செய்து செல்கின்றனர். இந்த சட்டவிரோத செயற்பாட்டை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரினார்.

அதனை அடுத்து நெல்லியடி பொலிஸார் அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து நடவடிக்கையை எடுக்குமாறு இணைத்தலைவர்கள் கூறி இருந்தனர்.

அதேவேளை மதுவரி திணைக்கள உதவி பணிப்பாளரிடம் வடக்கு மாகாண ஆளுநர், சட்டவிரோத மதுபான சாலைகள் தொடர்பில் ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பினார். சட்டவிரோத மதுபானசாலைகளை கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு உங்களுக்கு உள்ளது. அதை நீங்கள் செயல்படுத்த வேண்டும். அடுத்த முறை நீங்கள் கூட்டத்திற்கு வரும்போது இவ்வளவு காலத்தில் எத்தனை சட்டவிரோத மதுபானசாலைகளை கட்டுப்படுத்தி இருக்கிறீர்கள் என்ற விபரத்துடன் வரவேண்டும் எனவும் பணித்தார்.

யாழ்.விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT