கட்டலான் தலைவரின் அனைத்து அதிகாரங்களும் பறிபோகும் நிலை | தினகரன்

கட்டலான் தலைவரின் அனைத்து அதிகாரங்களும் பறிபோகும் நிலை

கட்டலோனிய பிராந்தியத்தில் ஸ்பெயின் நேரடி ஆட்சியை கொண்டுவரும் அரசியலமைப்பின் பிரிவு 155ஐ அமுல்படுத்த ஸ்பெயின் செனட் சபை ஒப்புதல் அளித்தால் அந்த பிராந்திய தலைவர் கார்லஸ் பியுக்டெமொன்டின் அனைத்து அதிகாரங்களும் பறிபோகும் என்பதோடு சம்பளமும் நிறுத்தப்படவுள்ளது.

இந்த தகவலை வெளியிட்ட ஸ்பெயின் துணை பிரதமர் சொரயா சயென்ஸ் டி சன்டமரியா, வாக்கெடுப்புக்கு பின் கட்டலோனிய பிராந்தியத்திற்கு மத்திய அரசை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒற்றை அதிகாரியே இருப்பார் என்று தெரிவித்தார்.

ஸ்பெயின் செனட் சபை வரும் வெள்ளிக்கிழமை இதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் ஸ்பெயின் அரசின் உத்தரவுகளை கட்டலோனிய நிர்வாகம் பின்பற்றாது என்று அந்த பிராந்தியத்தின் மூத்த அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்டலோனிய அரசின் அதிகாரத்தை பறிக்கும் அறிவிப்பை ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜோய் வெளியிட்டிருக்கும் நிலையில் கட்டலோனிய பிரிவினைவாத கட்சிகள் தமது எதிர்கால திட்டம் பற்றி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன.

கட்டலோனியாவில் கடந்த ஒக்டோபர் 1 ஆம் திகதி இடம்பெற்ற சுதந்திரத்திற்கான மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பை அடுத்தே அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த வாக்கெடுப்பை ஸ்பெயின் மத்திய அரசு சட்டவிரோதமென அறிவித்தது.

எனினும் 43 வீதமானோரே வாக்களித்த இந்த வாக்கெடுப்பில் கட்டலோனியா தனிநாடாக பிரிவதற்கு 90 வீத வாக்குகள் கிடைத்தன. 


There is 1 Comment

Pages

Add new comment

Or log in with...