பிரதீபா பிரபா விருது பெற்ற அதிபர் கௌரவிப்பு | தினகரன்

பிரதீபா பிரபா விருது பெற்ற அதிபர் கௌரவிப்பு

இவ்வருடம் பிரதீபா பிரபா விருது கிடைக்கப்பெற்ற அக்கரைப்பற்று அரசினர் முஸ்லிம் ஆண்கள் வித்தியாலய அதிபர் எம்.எஸ். அப்துல் நயீமை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று (24) பாடசாலை திறந்த வெளியரங்கில் இடம்பெற்றது.

பாடசாலைச் சமூகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் அதிபர் மற்றும் கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ. கலீலுல் றஹ்மான்  ஆகியோர்  அழைத்துவரப்படுவதனையும், அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி பறூசா நக்பர் நினைவுச் சின்னம் வழங்குவதனையும் படங்களில் காணலாம்.

(ஆலையடிவேம்பு விசேட நிருபர் - எம்.எல். சரீப்தீன்)

 


Add new comment

Or log in with...