இலங்கையின் ஆழ்கடல் ரோந்து கப்பலுக்கு "சுரக்ஸா" எனப் பெயர் சூட்டல் | தினகரன்

இலங்கையின் ஆழ்கடல் ரோந்து கப்பலுக்கு "சுரக்ஸா" எனப் பெயர் சூட்டல்

இலங்கை கடலோர பாதுகாப்பு படையின் முதலாவது ஆழ்கடல் ரோந்து கப்பலுக்கு 'சுரக்ஸா' எனப் பெயரிடப்பட்டு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தனவினால் வழங்கப்பட்டது.

கொழும்புத் துறைமுகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்னவும் கலந்து கொண்டார்.

இந் நிகழ்விற்கு வருகை தந்த அதிதிகளை, இலங்கை கடற்படை தளபதி மற்றும் இலங்கை கடலோர பாதுகாப்புப்படை பணிப்பாளர் ஆகியோர் இணைந்து வரவேற்றனர்.

இந்திய பாதுகாப்பு படைக்கு சொந்தமான 74.10 மீட்டர் நீளமுடைய இந்த ஆழ்கடல் ரோந்துப் படகு, இலங்கை கடலோர பாதுகாப்பு படைக்கு செப்டம்பர் மாதம் வைபவரீதியாக பரிசளிக்கப்பட்டது.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரினால் அதிகாரம் அளிக்கப்பட்ட ஆணைச்சீட்டு கப்பலின் கட்டளைத் தளபதியிடம் கையளிக்கப்பட்டது. பின்னர் இவ் ஆணைச்சீட்டு கப்பலின் கட்டளைத் தளபதியால் வாசிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதிகாரமளிக்கப்பட்ட பெயர் பலகையை இராஜாங்க அமைச்சர் திரை நீக்கம் செய்து வைத்தார். (ஸ) 

 


Add new comment

Or log in with...