இலங்கையில் விமான உற்பத்தி | தினகரன்

இலங்கையில் விமான உற்பத்தி

அடுத்த வருடம் முதல் ஆரம்பம்

இலங்கையில் முதற்தடவையாக அடுத்த வருடம் முதல், விமானப்படையினர், விமானம் தயாரிப்பு பணியில் ஈடுபடவுள்ளதாக விமானப்படை தளபதி எயார் மாஷல் கபில ஜயம்பதி தெரிவித்தார்.

இதற்கான தொழில்நுட்ப ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

யுத்தத்தினால் உயிரிழந்த சகல விமானப்படை வீரர்கள், காணாமல் போனவர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களுக்கு ஆசி வேண்டி கண்டி தலதா மாளிகையில் நடைபெற்ற மத அனுஷ்டானங்களில் கலந்து கொண்டபோதே அவர் இதனை தெரிவித்தார்.

விமானப்படையினூடாக விமானங்களை நிர்வகிக்கும் நடவடிக்கைகளே இடம்பெற்றுள்ளன. பாதுகாப்பு செயலாளரின் ஆலோசனைக்கமைய விமானங்களை இங்கு தயாரிப்பதற்குத் தேவையான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தேவையான இடம் , சூழல், உற்பத்தி பணிகள் நிறைவடைந்த பின்னர் அடுத்த வருடம் முதல் விமானங்களை உற்பத்தி செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும்.

யுத்த காலத்தில் யுத்தம் காரணமாக விமானங்கள் சேதமடைந்தாலும் தற்பொழுது பறவைகளினால் சேதம் ஏற்படுகிறது.

எமது நாட்டிற்குரிய சர்வதேச கடற்பரப்பை பாதுகாப்பதற்கும், நாட்டிற்குள் சட்டவிரோதமாக பொருட்கள் எடுத்து வரப்படுவதை தடுக்கவும் கடற்படையுடன் இணைந்து கண்காணிப்பு மற்றும் விசேட பாதுகாப்பு முன்னெடுப்புகளை செய்து வருகிறோம். எமது நாட்டில் விமானங்களை உற்பத்தி செய்யும் அதே வேளை, நாட்டிற்கு உகந்த தொழில் நுட்பத்துடன் கூடிய விமானங்களை இறக்குமதி செய்வதற்கும் விமானப்படை திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். (பா) 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...