4th ODI: SLvPAK; இலங்கை துடுப்பெடுத்தாட தீர்மானம் | தினகரன்

4th ODI: SLvPAK; இலங்கை துடுப்பெடுத்தாட தீர்மானம்

 

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் இடம்பெற்று வரும் ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டி இன்று (20) சார்ஜாவில் இடம்பெறுகிறது.

பகலிரவு போட்டியாக இடம்பெறும் இன்றைய (20) போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இப்போட்டியில் அறிமுக வீரர்களாக இலங்கை அணி சார்பாக சதீர சமரவிக்ரமவும், பாகிஸ்தான் அணி சார்பாக உஸ்மான் கானும் விளையாடவுள்ளனர்.

ஐந்து போட்டிகளைக் கொண்ட இத்தொடரில் 3 - 0 என பாகிஸ்தான் அணி முன்னிலை வகிக்கின்றது.

கடந்த புதன்கிழமை (13) அபுதாபியில் இடம்பெற்ற தீர்க்கமான மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றிருந்தது.

அதன் அடிப்படையில் இலங்கை அணி இறுதியாக இடம்பெற்ற 10 போட்டிகளில் தொடர் தோல்வியைச் சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

#4thODI #SLvPAK #Sharjah #Toss #SL

Add new comment

Or log in with...