மியன்மார் - ரோஹிங்யா அகதிகள் தங்கவைக்கப்பட்டிருந்த வீட்டிற்கு முன்னால் குழப்பம் விளைவித்த சம்பவம் தொடர்பில் சிங்கள ஜாதிக பலவேக அமைப்பின் பொதுச் செயலாளர் அரம்பேபொல ரத்தனசார தேரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்கிஸ்ஸ பிரதேசத்தில் கடந்த செப்டெம்பர் 26 ஆம் திகதி இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த அரம்பேபொல ரத்தனசார தேரரையே பொலிசார் இன்று (20) கைது செய்துள்ளனர்.
பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய, கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ்ஸில் பயணம் செயதுகொண்டிருந்த அவரை, நிட்டம்புவ பிரதேசத்தில் வைத்து பொலிசார் கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் மற்றும் சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமண தயாரத்தன தேரர் உள்ளிட்ட 07 பேர் கைது செய்யப்பட்டதோடு, இருவரைத் தவிர ஏனைய ஐவரும் பிணையில் விடுதலை செய்யபட்டதோடு, டான் பிரசாத் உள்ளிட்ட இருவருக்கு எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Add new comment