தாஜுதீன் வழக்கின் நீதிமன்ற வைத்திய அதிகாரிக்கு பிணை | தினகரன்

தாஜுதீன் வழக்கின் நீதிமன்ற வைத்திய அதிகாரிக்கு பிணை

ரக்பி வீரர், வசீம் தாஜுதீனின் பிரேத பரிசோதனைக்காக எடுக்கப்பட்ட அவரின் உடல்கூறுகள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் கொழும்பு, முன்னாள் பிரதான சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகர நீதிமன்றில் ஆஜராகி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

வசீம் தாஜுதீனின் கொலை தொடர்பில், குற்ற புலனாய்வு திணைக்களம் தன்னை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் உரிய பிணையில தன்னை விடுதலை செய்யுமாறு கோரியும் முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி பேராசிரியர் ஆனந்த சமரசேகர, நீதிமன்றில் சரணடைந்திருந்தார்.

கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றில் முன்ஜாமின் மனுவொன்றை தாக்கல் செய்த அவர், குற்ற விசாரணை திணைக்களத்தினர், முறையற்ற காரணம் தெரிவித்து, பொது சொத்துகள் சட்டம், 
இழைய மாற்றீடு சட்டம் மற்றும் குற்றவியல் சட்டத்தின் 198 ஆம் பிரிவின் கீழ் தன்னை கைது செய்வதற்கு கைது செய்வதற்கு தயாராவதாகவும், தான் சுகவீனமுற்ற நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்து, வழங்கக்கூடிய பிணை ஒன்றில் விடுவிக்குமாறு கோரியிருந்தார்.

அதன் அடிப்படையில் குறித்த மனுவை கருத்திற் கொண்ட நீதவான், தலா ரூபா 5 இலட்சம் கொண்ட இரண்டு சரீரப் பிணையில் விடுவித்ததோடு, நீதிமன்ற அனுமதியின்றி வெளிநாடு செல்வதற்கும் தடை விதித்தார்.

எதிர்வரும் ஒக்டோபர் 24 ஆம் திகதி குற்ற விசாரணை திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்குமாறும் உத்தரவிடப்பட்டது.

இது குறித்தான வழக்கு எதிர்வரும் நவம்பர் 11 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

 


Add new comment

Or log in with...