தெரிவுக்குழு நியமித்து மோசடிகள் தொடர்பாக ஆராய வேண்டும் | தினகரன்

தெரிவுக்குழு நியமித்து மோசடிகள் தொடர்பாக ஆராய வேண்டும்

மத்திய அதிவேக நெடுஞ்சாலை அமைக்கும் பணிகளை தற்காலிகமாக இடைநிறுத்தி பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்று அமைத்து அதில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து ஆராய வேண்டும் என ஜே.வி.பி கோரிக்கை விடுத்துள்ளது.

மத்திய அதிவேக நெடுஞ்சாலையை அமைத்து முடிப்பதற்கு 25,000 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணம் செலவாகும். முடிந்தால் அதற்கு குறைவான செலவில் அதிவேக நெடுஞ்சாலையை அமைத்துக் காண்பிக்குமாறு எதிர்க்கட்சியின் பிரதம கொராவும், ஜே.வி.பியின் தலைவருமான அநுரகுமார திசாநாயக்க அரசாங்கத்திடம் சவால்விடுத்தார். மத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தில் மோசடி இடம்பெறுவதாக கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தை ஆரம்பித்து உரையாற்றும்போதே அவர் இந்த சவாலை முன்வைத்தார்.

ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத் 


Add new comment

Or log in with...