சூழல் மாசு காரணமாக உலகிலேயே இந்தியாவில் தான் அதிக இறப்பு | தினகரன்

சூழல் மாசு காரணமாக உலகிலேயே இந்தியாவில் தான் அதிக இறப்பு

சூழல் மாசடைதல் காரணமாக உலகிலேயே இந்தியாவில் தான் அதிக இறப்பு ஏற்படுகிறது. 2015 ஆம் ஆண்டில் சூழல் மாசடைதல் காரணமாக 25 இலட்சம் மக்கள் பலியாகி உள்ளனர். இது உலக அளவில் மற்ற நாடுகளை விட அதிகம் என மாசு மற்றும் சுகாதாரம் மீதான லான்சட் கமிஷன் மருத்துவ இதழ் தெரிவித்துள்ளது. இரண்டாவதாக சீனாவில் மாசு காரணமாக 18 இலட்சம் மக்கள் பலியாகி உள்ளனர்.

உலக அளவில் எய்ட்ஸ், காசநோய் மற்றும் மலேரியா ஆகியவற்றை விட மூன்று மடங்கு அதிகமாக சூழல் மாசடைதல் காரணமாக பலி எண்ணிக்கை 90 இலட்சமாக இருந்தது. உலகெங்கும் உள்ள அனைத்து இறப்புக்களிலும் 6 ல் ஒருவர் சூழல் மாசடைதல் காரணமாக பலியாகிறார். வளரும் நாடுகளில் அதிகபடியாக சூழல் மாசடைவதாக லான்சட் மருத்துவ இதழில் அறிக்கை தெரிவிக்கிறது.

தூய பூமி சூழல் குழு ஆலோசகர் மற்றும் ஆசிரியர் கார்ட்டி சண்டிலா கூறியதாவது:-

உலகமயமாக்கல், சுரங்க மற்றும் உற்பத்தி ஏழை நாடுகளுக்கு மாற்றப்பட்டது. சுற்றுச்சூழல் ஒழுங்குமுறைகளும் அமுலாக்கமும் மந்தமானதாக இருக்கிறது. குறிப்பாக பல ஆண்டுகள் உயர் மாசுபாடு வெளிப்பாடு காரணமாக மனித சுவாசம் மற்றும் அழற்சி முறைகளை பாதிக்கலாம், இதனால் இதய நோய், ஸ்டோக் மற்றும் நுரையீரல் புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.

ஏழை நாடுகளில் உள்ள மக்கள், புதுடெல்லியில் கட்டுமானத் தொழிலாளர்கள் போன்றவர்கள் -காற்று மாசடைதல் மற்றும் வெளிப்பாடுகளில் இருந்து தங்களை பாதுகாக்க குறைந்த அளவே முடியும். அவர்கள் வாகனம் செலுத்துகிறார்கள், மாசுபடுத்தும் பணியிடங்களுக்கு பஸ்ஸில் பயணம் செய்கிறார்கள். " இவ்வாறு அவர் கூறினார். 


Add new comment

Or log in with...