ரயில் பயணம்: செல்பி எடுத்த 24 பேர் பலி | தினகரன்

ரயில் பயணம்: செல்பி எடுத்த 24 பேர் பலி

இந்த வருடத்தில் கடந்த 8 மாத காலப் பகுதியில் ரயில் நிலையங்களிலும் ரயில் பயணங்களின் போதும் செல்பி எடுத்துக்கொண்டவர்கள் அனர்த்தங்களுக்கு உட்பட்டு 24 பேர் உயிரிழந்துள்ளதாக வீதி பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. இவர்களில் அதிகமானோர் இளைஞர் யுவதிகளாவர் என்றும் அச்சபை தெரிவித்தது.

இதேவேளை வருடந்தோறும் ரயில் விபத்துக்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் 2016 ஆம் ஆண்டு ரயில் பாதையில் பயணித்தவர்கள் 436 பேர் ரயில் மோதி பாதிப்புக்குள்ளானதோடு இவர்களில் 180 பேர் உயிரிழந்துள்ளனர். 256 பேர் படுகாயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

அத்துடன் பாதுகாப்புற்ற ரயில் கடவைகளில் ரயில் வாகனங்களுடன் மோதியதில் 84 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.மதுபோதையில் ரயில் மிதிபலகையில் பயணம் செய்து தவறிவிழுந்து 76 பேர் பலியாகியுள்ளதாகவும் மேற்படி சபை தெரிவிக்கின்றது. (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம் 


Add new comment

Or log in with...