விமான சேவை ஊழியரிடம் ரூபா 26 மில்லியன் நகை | தினகரன்

விமான சேவை ஊழியரிடம் ரூபா 26 மில்லியன் நகை

 

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணிபுரியும், ஶ்ரீலங்கன் விமான சேவை ஊழியரிடமிருந்து ரூபா 26 மில்லியன் பெறுமதியான நகைகள் மீட்கப்பட்டுள்ளன.

ஜித்தாவிலிருந்து வந்த விமானத்தில் வந்த குறித்த சந்தேகநபர், 5.3 கிலோ கிராம் நகைகளை பட்டி (belt) ஒன்றின் உதவியுடன் தனது காலில் மறைத்து வைத்து கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, இது தொடர்பில் சுங்க அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

(Pic: Azzam Ameen)


Add new comment

Or log in with...