அமெரிக்காவுக்கு இந்தியா உதவ வேண்டும் | தினகரன்

அமெரிக்காவுக்கு இந்தியா உதவ வேண்டும்

பாகிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு இந்தியா உதவ வேண்டுமென, ஐ.நா-விற்கான அமெரிக்கத் தூதர் நிக்கி ஹாலே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அமெரிக்கா-, இந்தியா நட்புறவு மாநாட்டில், ஐக்கிய நாடுகளின் சபைக்கான அமெரிக்கத் தூதர் நிக்கி ஹாலே கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், “பொருளாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்களில் அமெரிக்காவுக்கு இந்தியா உதவ வேண்டும். தீவிரவாதத்துக்கு எதிராகவும் தீவிரவாதத்தை முற்றிலும் ஒழிக்கவும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட தெற்கு ஆசிய நாடுகளில் அமெரிக்கா கூடுதல் கவனம் செலுத்திவருகிறது.

 இந்தியாவுக்கான பொருளாதார மேம்பாடு மற்றும் அந்நாட்டின் பாதுகாப்புக்காகவும் அமெரிக்கா உதவிவருகிறது. பாகிஸ்தான் என்று மட்டுமில்லை, எந்த நாடாக இருந்தாலும் அமெரிக்காவைத் தாக்கும் எண்ணத்துடன் இருக்கும் தீவிரவாதிகளுக்குப் புகலிடம் தருவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்றார்.


Add new comment

Or log in with...