ஆப்கான் பொலிஸ் மையத்தில் தலிபான் தாக்குதல்: 15 பேர் பலி | தினகரன்

ஆப்கான் பொலிஸ் மையத்தில் தலிபான் தாக்குதல்: 15 பேர் பலி

ஆப்கானிஸ்தானின் கார்டஸ் நகரில் உள்ள பொலிஸ் பயிற்சி மையம் ஒன்றின் மீது புகுந்த தலிபான் தற்கொலை குண்டுதாரிகள் மற்றும் துப்பாக்கிதாரிகள் நேற்று நடத்திய தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலில் உள்ளுர் பொலிஸ் தலைவரும் கொல்லப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத செய்தி ஒன்று கூறுகிறது. இதில் மேலும் 40 பேர் காயமடைந்துள்ளனர்.

பயிற்சி மையத்திற்கு அருகில் தற்கொலைதாரி ஒருவர் வெடிபொருட்களை நிரப்பிய கார் வண்டியை வெடிக்கச் செய்த பின் ஏனைய தாக்குதல்தாரிகள் தாக்குதலை ஆரம்பித்ததாக உள்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் உயிரிழப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மோதல் நேற்று பின்னேரம் வரை தொடர்ந்த நிலையில் உயிரிழந்தவர்களில் பெண்கள், மாணவர்கள் மற்றும் பொலிஸாரும் இருப்பதாக கார்டஸ் பொது சுகாதார இயக்குனர் ஹெதயதுல்லாஹ் ஹமிதி குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு படையினரால் இரு தாக்குதல்தாரிகள் கொல்லப்பட்டனர். 


Add new comment

Or log in with...