நட்சத்திரங்களின் மோதலில் ஈர்ப்பு அலைகள் அவதானிப்பு | தினகரன்

நட்சத்திரங்களின் மோதலில் ஈர்ப்பு அலைகள் அவதானிப்பு

அதிக அடர்த்தியான இரு நியூட்ரோன் நட்சத்திரங்கள் மோதியபோது தங்கம் மற்றும் பிளாடினம், யுரேனியம் உட்பட பெரும் அளவான கன உலோகங்கள் வெளிப்படுவதை விஞ்ஞானிகள் அவதானித்துள்ளனர்.

பூமியில் இருந்து 130 மில்லியன் ஒளியாண்டு தொலைவிலேயே இரு நட்சத்திரங்கள் பிணைந்துள்ளன. இது கனமான தனிமங்களின் தோற்றம் பற்றிய விஞ்ஞான மர்மத்திற்கான விடை காண உதவுமென நம்பப்படுகிறது.

இதன்போது பிரபஞ்ச நிகழ்வொன்றில் விஞ்ஞானிகள் முதல்முறை ஒளி மற்றும் ஈர்ப்பு அலைகளை அவதானித்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள ஈர்ப்பு அலை ஆய்வுகூடத்தில் கடந்த ஓகஸ்ட் மாதம் அவதானிக்கப்பட்டுள்ளது. இதனை உலகெங்கிலுமுள்ள தொலைநோக்கிகளாலும் பார்க்க முடிந்துள்ளது.

அல்பர்ட் ஐன்ஸ்டீன் 1916 ஆம் ஆண்டிலேயே ஈர்ப்பு அலைகள் தொடர்பில் முதல்முறை எதிர்வுகூறியபோதும் 2015 வரை அது கண்டுபிடிக்கப்படவில்லை. இதுவரை மொத்தம் ஐந்து ஈர்ப்பு அலைகள் அவதானிக்கப்பட்டுள்ளன.

எனினும் தற்போதைய அவதானிப்பு இதுவரையில் இடம்பெற்றதில் எமக்கு மிக அருகாமையில் நிகழ்ந்ததாகும். எனினும் இந்த நிகழ்வு பூமியில் டைனோசர்கள் இருந்த 130 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்டதாகும். இதன் ஒளி மற்றும் ஈர்ப்பு அலை தற்போதே பூமியை அடைந்துள்ளது. பிரபஞ்சம் எந்த வேகத்தில் விரிவடைகிறது என்பதை இதுபோன்ற தரவுகளிலிருந்து அறிய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 


Add new comment

Or log in with...