காரைதீவு கடலில் மீண்டும் கீரி மீன் அறுவடை | தினகரன்


காரைதீவு கடலில் மீண்டும் கீரி மீன் அறுவடை

மழை தொடர்கிறது!

காரைதீவில்  மீண்டும் நேற்று  (15) பெருந்தொகையான கீரி மீன்கள் கரை வலை மூலம் பிடிபட்டன. இதேவேளை அம்பாறை மாவட்டத்தில் மாரிமழை  பொழிந்துவருகிறது. வீதியெங்கும் வெள்ளம் தேங்கி நிற்கிறது.

நீண்ட காலத்திற்குப்பிறகு இவ்விதம் கீரி மீன்கள் பிடிபட்டதனால் மீனவர்கள் மகிழ்ச்சிடைகின்றனர். ஒரு கிலோ கீரிமீன் ரூபா 100 க்கு விற்கப்பட்டு வருவதாக பிரதேச மீனவர்கள் தெரிவித்தனர்.

இதன் மூலம் மீனவர்களினதும் மீன் வியாபாரிகளினதும் வருமானம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பிடிக்கப்பட்ட மீன்களில் அதிகமானவை குளிரூட்டப்பட்ட பெட்டிகளில் அடைக்கப்பட்டதோடு கருவாடாக மாற்றும் நோக்கில் பீப்பாய்களில் அடைக்கப்பட்டும், இலங்கையின் ஏனைய பிரதேசங்களுக்கு வியாபாரிகள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டவையும் குறிப்பிடத்தக்கது.

(காரைதீவு குறூப் நிருபர் - சகா)

 


Add new comment

Or log in with...