7,500 கிலோ கழிவு தேயிலையுடன் இருவர் கைது | தினகரன்

7,500 கிலோ கழிவு தேயிலையுடன் இருவர் கைது

 
சுமார் 7,500 கிலோ கிராம் கழிவு தேயிலை தூளுடன் ஹட்டன் டிக்கோயா பகுதியில் இரண்டு பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
நேற்று (12) மாலை 6.30 மணியளவில் ஹட்டன் - டிக்கோயா வீதியில் வைத்து ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
குறித்த கழிவு தேயிலை தூளை அனுமதி பத்திரம் இல்லாமல் அக்கரப்பத்தனை பகுதியிலிருந்து டிக்கோயா பத்தல்கலை பகுதிக்கு கொண்டு செல்லும் போது பொலிஸாரினால் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.
 
 
அதன்பின் கைப்பற்றப்பட்ட கழிவு தேயிலை தூளையும், வாகனத்தையும், சந்தேக நபர்களும் ஹட்டன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டுள்ளனர்.
 
 
சந்தேகநபர்கள் இருவரையும் இன்று (13) ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்திருப்பதாக ஹட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
 
 
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 
 
 
(ஹட்டன் சுழற்சி நிருபர் - கே. கிரிஷாந்தன்)
 
 

Add new comment

Or log in with...