இறக்காமம் அஷ்ரபியன், 2017 கிண்ணம் 2002 எம் சி றெப்டஸ் அணியினர் வசம் | தினகரன்

இறக்காமம் அஷ்ரபியன், 2017 கிண்ணம் 2002 எம் சி றெப்டஸ் அணியினர் வசம்

இறக்காமம் இளைஞர்கள் நடாத்திய அணிக்கு ஏழு பேர்பளைக் கொண்ட மட்டுப்படுத்தப்பட்ட 05 ஒவர்வகளைக் கொண்ட 'அஷ்ரபியன் 2017 மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை (08) இறக்காமம் குளக்கரை மைதானத்தில் மிகவும் கோலாகலமான முறையில் நடைபெற்றது.

இறக்காமம் அல்-அஷ்ரப் மத்திய கல்லூரியில் ஒரே ஆண்டில் கல்வி கற்று விடைபெற்றுச் சென்ற பழைய, புதிய மாணவர்களைக் கொண்ட சுமார் 30 அணிகளை கொண்ட இந்த கிரிக்கெட் சுற்றுப்போட்டி மூன்று வாரங்களாக இடம்பெற்றது.

இச்சுற்றுப் போட்டியில் 1985 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண சரத்தில் கல்வி கற்று விடைபெற்றுச் சென்ற பழைய மாணவர்களின் அணி தொடக்கம் 2014 ஆம் ஆண்டு வரை கல்வி கற்ற புதிய மாணவர்களின் அணி என சுமார் 30 அணிகள் பங்கு கொண்டனர்.

லீக் சுற்றுப்போட்டியாக இடம்பெற்ற இப்போட்டியில் இறுதிப் போட்டி 2012 ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரண தரத்தில் கல்வி கற்ற 'சொமிÓ அணியினரும் 2002 ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரண தரத்தில் கல்வி கற்ற 'எம்சி றெப்டஸ்Ó அணியினருக்கும் இடயில் இடம்பெற்றது. இதில் 2002 'எம்சி றெப்டஸ்Ó அணியினர் 27 ஓட்டங்களால் வெற்றி பெற்று 'அஷ்ரபியன் 2017Ó கிண்ணத்தினை சுவிகரித்துக்கொண்டனர்.

இந்நிகழ்வில் இறக்காமம் அல்-அஷ்ரப் மத்திய கல்லூரியில் கடந்த காலங்களில் கல்வி பூட்டிய பழைய ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் கல்வி மான்கள் என பலர் அதிதிகளாக கலந்து கொண்டமை மிகவும் சிறப்பம்சமாகும்.

(ஹிங்குறாணை குறூப் நிருபர்) 


Add new comment

Or log in with...