Thursday, October 12, 2017 - 12:20
சமூக வலுவூட்டல் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவை எதிர்வரும் ஒக்டோபர் 25 ஆம் திகதி உச்ச நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக, பொது பல சேனா அமைப்பைச் சேர்ந்த மாகல்கந்த சுதந்த தேரவினால் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று (12) உச்ச நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது நீதவான் அவருக்கு அழைப்பாணை விடுத்துள்ளார்.
கடந்த ஓகஸ்ட் 21 ஆம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, சில நீதவான்களும், வழக்கறிஞர்களும் ஊழல்வாதிகள் என தெரிவித்திருந்தாக தெரிவிக்கப்பட்டே, குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Add new comment