வாகன விபத்தில் ஜப்பார் அலி உயிரிழப்பு | தினகரன்

வாகன விபத்தில் ஜப்பார் அலி உயிரிழப்பு

 

கிண்ணியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த எம்.ரீ. ஜப்பார் அலி வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (12) வியாழக்கிழமை மரணமானார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மூத்த உறுப்பினரும், நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினருமான நிந்தவூரைச் சேர்ந்த ஜப்பார்அலி கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.ரி.அப்துல் நிசாமின் சகோதரருமாவார்.

நிந்தவூரிவிருந்து திருமலை சென்ற இவர்களது காரும் மூதூரிலிருந்து கிண்ணியாவிலிருந்து மூதூர் நோக்கிப் பயணித்த பஸ்சும் நேருக்கு நேர் மோதியதால் இவ்விபத்து சம்பவித்துள்ளது.

நேற்றுமுன்தினம் கிண்ணியா பாலத்திற்கருகாமையிலுள்ள உப்பாறு எனுமிடத்தில் இச்சம்பவம் இடம்பெற்றது.

இவருடன் பயணித்த மூவரும் காயமடைந்தனர். விபத்தில் படுகாயமடைந்த லாபீர் மற்றும் ஜப்பார்அலி இருவரும் கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக திருமலை வைத்தியசாலைக்கு மாற்றப்படடிருந்தனர்.

இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று (12) வியாழக்கிழமை காலை ஜப்பார் அலி காலமானார்.

 


Add new comment

Or log in with...