பேச்சுவார்த்தையை அடுத்து, பணி புறக்கணிப்பு தற்காலிக நிறுத்தம் (UPDATE) | தினகரன்

பேச்சுவார்த்தையை அடுத்து, பணி புறக்கணிப்பு தற்காலிக நிறுத்தம் (UPDATE)

(படம்: ஷெனாலி கொடகம்புற)

தமது பணிப் புறக்கணிப்பை தற்காலிகமாக கைவிடுவதாக புகையிரத சங்கம் அறிவித்துள்ளது.

ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய, ஜனாதிபதி செயலாளருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்தே இவ்வாறு தமது பணி புறக்கணிப்பு நடவடிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.

அவர்களது கோரிக்கைகள் தொடர்பில் ஆராய, போக்குவரத்து அமைச்சின் செயலாளரின் தலைமையில் எட்டு பேரைக் கொண்ட குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


பருவச்சீட்டு உடையவர்கள் இ.போ.ச.வில் இலவசமாக பயணிக்கலாம்

புகையிரத பருவச்சீட்டை கொண்டுள்ளவர்கள் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
போக்குவரத்து மற்றும் உள்ளூர் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதனை அறிவித்துள்ளார்.
 
புகையிரத சாரதிகள் மற்றும் காவலர்கள் நேற்று (11) முதல் முன்னெடுத்து வரும் பணி புறக்கணிப்பு தொடரும் நிலையில் குறித்த அறிவிப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
இதேவேளை, போக்குவரத்து அமைச்சருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதால், தற்போது மேற்கொண்டு வரும் பணி புறக்கணிப்பை தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாக, புகையிரத தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.
 
 

Add new comment

Or log in with...