இ.போ.ச. பஸ் சாரதிகள், நடத்துனர்களின் விடுமுறை இரத்து | தினகரன்

இ.போ.ச. பஸ் சாரதிகள், நடத்துனர்களின் விடுமுறை இரத்து

 
இலங்கை போக்குவரத்து சபையில் பணி புரியும் சாரதிகள் மற்றும் நடத்துனர்களின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.
 
புகையிரத சாரதிகள் மற்றும் காவலர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக, கஷ்டத்தை எதிர்நோக்கியுள்ள பொதுமக்களின் நலன் கருதி, பொது போக்குவரத்தை உரிய முறையில் நடைமுறைப்படுத்தும் நோக்கில் இந்நடவடிக்கையை எடுத்துள்ளதாக போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
 

Add new comment

Or log in with...