மாநகர, நகர, பிரதேச சபை திருத்தங்களில் கையொப்பம் | தினகரன்

மாநகர, நகர, பிரதேச சபை திருத்தங்களில் கையொப்பம்

 
உள்ளுராட்சி சபை தேர்தலில் தொடர்பான மாநகர சபை, நகர சபை, பிரதேச சபை ஆகிய 3 தொடர்பான திருத்தச் சட்டங்களில் சபாநாகர் கருஜயசூரிய கையெழுத்திட்டுள்ளார்.
 
கடந்த வாரம் (09) உள்ளுராட்சிகள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட மாநகர சபை, நகர சபை மற்றும் பிரதேச சபை திருத்த கட்டளைச் சட்டமூலங்கள், திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டன.
 
அதற்கு ஒப்புதல் வழங்கும் வகையில் சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று (12) பாராளுமன்றத்தில் கையொப்பமிட்டார்.
 
சபாநாயகரின் ஒப்புதலை அடுத்து, ஒருவார காலப்பகுதியில் குறித்த திருத்த சட்டங்கள் வர்த்தமானியில் பிரசுரிக்கக்கப்படும் என அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்திருந்தார்.
 

Add new comment

Or log in with...