சிறுவர் உடல் பருமன் உலகெங்கும் அதிகரிப்பு | தினகரன்

சிறுவர் உடல் பருமன் உலகெங்கும் அதிகரிப்பு

 

உடற்பருமனாக உள்ள பிள்ளைகள், பதின்ம வயதினர் ஆகியோரின் எண்ணிக்கை, கடந்த 40 ஆண்டுகளில் 10 மடங்கு அதிகரித்துள்ளது.

ஆசியாவில் குறைவான, நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் அத்தகையோரின் எண்ணிக்கை வேகமாய் அதிகரித்து வருவதாக அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று குறிப்பிடுகிறது.

பிள்ளைகள், பதின்ம வயதினர் ஆகியோர் உடற்பருமனாகும் விகிதம் அமெரிக்கா, வடமேற்கு ஐரோப்பா, இதர பணக்கார நாடுகளில் நிலையாக உள்ளது. ஆயினும், அந்த விகிதம் ஏற்கத்தக்கதல்ல என இம்பீரியல் லண்டன் பல்கலைக்கழகத்திலும் உலகச் சுகாதார நிறுவனத்திலும் உள்ள ஆய்வாளர்கள் கூறினர்.

உடற்பருமனாக இருக்கும் பிள்ளைகள், பதின்ம வயதினர் ஆகியோரின் எண்ணிக்கை 40 ஆண்டுகளுக்கு முன்னர், சுமார் 11 மில்லியனாக இருந்தது. இப்போது அந்த எண்ணிக்கை பத்து மடங்கிற்கு மேல் அதிகரித்து 120 மில்லியனாக உள்ளது என்று இம்பீரியல் பல்கலைக்கழகத்தின் பொதுச் சுகாதாரப் கல்லுௗரி தெரிவித்தது.

1975ஆம் ஆண்டில் சிறுவர், சிறுமி ஆகியோரில் உடற்பருமனாக இருப்போரின் விகிதம் 1 வீதத்திற்கும் குறைவாக இருந்தது. 2016ஆம் ஆண்டில் அந்த விகிதம் சிறுவர்களுக்கு 8 வீதமாகவும் சிறுமிகளுக்கு 6 வீதமாகவும் இருந்தது. 


Add new comment

Or log in with...